ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு; செப்.24ல் ஆஜராக உத்தரவு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு
செப்.24ல் ஆஜராக உத்தரவு

திருச்சி : தி.மு.க., தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மீது, தமிழக அரசையும், முதல்வரையும் அவதுாறாக பேசியதாக, திருச்சி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செப்., 24ல், ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின்,அவதூறு,வழக்கு, செப்.24, ஆஜராக, உத்தரவு


தி.மு.க., சிறுபான்மைப்பிரிவின், மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், ஜூன், 21ல்

திருச்சியில் நடந்தது.இதில் பங்கேற்ற, ஸ்டாலின், தமிழக அரசு குறித்தும், முதல்வர் பழனிசாமி குறித்தும் அவதுாறாக பேசியதாக, கடந்த, 11ம் தேதி திருச்சி மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வக்கீல் சம்பத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, கடந்த, 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 30ம் தேதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

தி.மு.க.,வின் தலைவராகியுள்ள ஸ்டாலின் தரப்பில், வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜராகி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினை வேந்தல் நிகழ்ச்சி, சென்னையில் நடப்பதால்,

Advertisement

ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று, நீதிபதி குமரகுருவிடம் தெரிவித்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், செப்., 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைக்கு விசாரணைக்கு, ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்றும், உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
31-ஆக-201817:40:06 IST Report Abuse

தமிழ் மைந்தன் நீதிபதிகளும் மனிதர்களே எத்தனை நாட்களுக்குதான் சினிமாவை பார்த்து மட்டுமே சிரிப்பார்கள்.கோர்டில் சிரித்தால் எப்படி இருக்கும் என சோதனை செய்யவே அழைத்துள்ளார்கள்

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஆக-201811:21:56 IST Report Abuse

Nallavan Nallavanஇப்பவும் ஏதாச்சும் ஐடியா பண்ணுங்க ....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஆக-201813:03:25 IST Report Abuse

Nallavan Nallavanவெண்டைக்காய் நினைவாற்றலுக்கு நல்லது .......

Rate this:
ramesh - chennai,இந்தியா
31-ஆக-201809:32:43 IST Report Abuse

rameshநாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் அமைச்சர்கள் எல்லோரும் ஜெயிலில் தான் இருப்பார்கள் என்று ஸ்டாலின் கூறியபோது ஒருவரும் அவதூறு வழக்கு தொடுத்ததாக தெரிய வில்லையே

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
31-ஆக-201810:18:12 IST Report Abuse

Jaya Ramநாங்கதான் ஊழல் செய்யலையே அதனால் எங்கள் மீது அந்த குற்றச்சாட்டு கிடையாது என்பது எங்கள் எண்ணம், ஒருவேளை அவர்கள் ஆட்சியில் இருந்த மந்திரிகள் ஊழல் செய்தவர்கள் மீது இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற எண்ணமாகவும் இருக்கலாம், அல்லது இவர்களாவது ஆட்சிக்கு வருவதாவது நடக்காத காரியம்...

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X