அ.தி.மு.க., பேனரை அகற்ற திருச்சியில் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பேனரை அகற்ற திருச்சியில் போராட்டம்

Added : ஆக 31, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அ.தி.மு.க., பேனரை அகற்ற திருச்சியில் போராட்டம்

திருச்சி திருச்சியில், அ.தி.மு.க., பேனர்களை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நடுரோட்டில் போராட்டம் நடத்தினார்.சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று மதியம் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார். அதில், திருச்சி மத்திய மண்டலத்திலும், மாநகரிலும் அனுமதியின்றி ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.பின், அவர் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள, திருச்சி, எம்.பி.,யும், மாநகர அ.தி.மு.க., மாவட்டச் செயலருமான குமாரின் அலுவலம் முன் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனரை அகற்ற வலியுறுத்தி நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சு நடத்தினர். ஆனால், 'பேனர்களை அகற்றாமல் அங்கிருந்து செல்ல மாட்டேன்' என்று கூறியதால், எம்.பி., குமாரின் அலுவலக உதவியாளர்களே பேனரை அகற்றிக் கொள்ள சம்மதித்தனர். பேனர் அகற்றப்பட்ட பின், டிராபிக் ராமசாமி கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
03-செப்-201816:56:52 IST Report Abuse
kalyanasundaram HIS EFFORTS ARE GOING FUTILE. A DAY HE MAY BE VERY RUDELY PUNISHED BY THESE ROWDIES
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
01-செப்-201816:50:41 IST Report Abuse
G.Krishnan அது சரி அதிமுக விளம்பர பேனர் அகற்றிவிட்டார்கள் . . . . .தி மு க தலைவருக்காக மெரீனா சமாதி கேஸை அவர் திரும்ப வாங்கவில்லைன்னு சொன்னாரே அது என்ன ஆச்சு . . . . . .திமுக சம்மந்தப்பட்டதுன்னா அவரோட நடவடிக்கை வேறமாதிரி இருக்கே . . .
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
01-செப்-201808:55:04 IST Report Abuse
Amirthalingam Sinniah பிழைகளை சுட்டிகாட்டும் குட்டி நக்கீரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X