மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

Added : ஆக 31, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

சென்னை, திடீர் உடல்நலக்குறைவால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்றிரவு, சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவில், 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று, திரும்பினார். நேற்று கட்சி அலுவலகம் சென்ற அவர், நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, பிற்பகல், 3:00 மணிக்கு வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்றிரவு, 7:30 மணிக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, ராமாபுரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'விஜயகாந்திற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது' என்றனர்.தே.மு.தி.க., வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
05-செப்-201802:48:59 IST Report Abuse
R KUMAR உடல் நலம் மீண்டு, குணமடைய வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Palakkarai,இந்தியா
04-செப்-201818:05:04 IST Report Abuse
S.prakash ஒன்று மட்டும் உண்மை இந்தியாவில் நல்ல மருத்துவர்கள் இல்லை. அமெரிக்கர்கள் வெளி நாடு சென்று சிகிச்சை பெறுவதை கேவலமாக நினைப்பார்கள்.சேவையாக மருத்துவம் மாறவேண்டும். இந்தியர் அனைவரும் நலம் பெற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
01-செப்-201811:16:59 IST Report Abuse
சுந்தரம் உடலில் நல்ல ரத்தம் ஓடும்போது யானை எட்டி உதைக்க தோன்றும். அதுவே ரத்தம் குறைந்தால் பார்ப்பவர்களிடமெல்லாம் தன் நிலையை எடுத்து சொல்லும். இவ்வரிகள் கண்ணதாசன் தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டது. தன் உடலில் நல்ல ரத்தம் ஓடியபோது ஒற்றைவிரல் நீட்டி கண் சிவக்க மரியாதை இன்றி யாரிடமோ வாங்கிய கூலிக்காக கூவியவர் இன்று இந்த நிலையில். எனினும் குணமடையட்டும்.
Rate this:
Share this comment
vidhuran - chennai,இந்தியா
03-செப்-201811:26:20 IST Report Abuse
vidhuranவிஜயகாந்தை விமர்சிப்பதற்கு இதுவல்ல நேரம் அவர் பூரண உடல் நலம் பெற்று திரும்பி வந்தபின் விமர்சிக்கலாம். அவர் உடல் நலம் பெற்று வர இறைவன் அருளட்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X