ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி : மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ்| Dinamalar

ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி : மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ்

Added : செப் 01, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஹரிகிருஷ்ணா,இறந்த உடல், செல்பி, மருத்துவமனை ஊழியர்கள்

ஐதராபாத் : தெலுங்கானாவில் நலகொண்டா அருகே ரசிகரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது கார்விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் மகன் ஹரிகிருஷ்ணா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன், மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த போட்டோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயலையும், மருத்துவமனையையும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கண்டனங்களும், எதிர்ப்புக்களும் குவிந்து வருவதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 4 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இந்த செயலுக்காக மருத்துமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.



கார் விபத்தில் மரணம் அடைந்த என்.டி.ராமராவ் மகன் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். “மனிதாபிமானமற்ற இவர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்கிறோம்; யாரும் அந்த போட்டோவை ஷேர் செய்யாதீர்கள்” என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
06-செப்-201812:31:47 IST Report Abuse
 nicolethomson எங்கே போகிறது கலாச்சாரம் ....
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
03-செப்-201820:38:00 IST Report Abuse
Sathish யாரவது செல்பி எடுத்தால் அந்த போனை பிடுங்கி உடைத்தெறியுங்கள். இதெல்லாம் என்ன கலாச்சார எளவோ தெரியல.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
03-செப்-201814:06:13 IST Report Abuse
கல்யாணராமன் சு. இன்றைய நிலைமையில், மலேரியா, டெங்கு, plague போன்றவை epidemics அல்ல...................இந்த செல்ஃபி மோகம்தான்பெரிய epidemic. முன்னே சொன்ன வியாதிகள் உயிரை எடுத்து விடும்.........ஆனால் இந்த செல்ஃபி மோகம் மனிதாபிமானம், கருணை, அறிவார்த்தல் எல்லாவற்றையும் கொன்றுவிட்டு மனிதர்களை நடைபிணமாகத்தான் ஆக்கிவிட்டது...............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X