மல்லையா, நிரவ்வை அடைக்க ஐரோப்பிய தரத்தில் சிறை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மல்லையா, நிரவ்வை அடைக்க ஐரோப்பிய தரத்தில் சிறை

மும்பை: வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற குற்றவாளிகளை அடைப்பதற்காகவே, மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச் சாலையில், ஐரோப்பிய தரத்திலான சிறை வளாகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, சிறை


கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தான். இதையடுத்து, அவன், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டன் தலைநகர், லண்டனில் தஞ்சம் அடைந்தான்.

அவனை, இந்தியா கொண்டு வந்து, விசாரணை நடத்தும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள சிறைகளின் தரம், மிக மோசமாக இருப்பதாக, லண்டன் நீதிமன்றத்தில், மல்லையா தரப்பு வாதிட்டது.இதையடுத்து, மல்லையாவை அடைக்கப்போகும்,மும்பை ஆர்தர் ரோடு சிறையை, 'வீடியோ' எடுத்து தாக்கல் செய்யும்படி, லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, மும்பை ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் உள்ள இரண்டு அறைகளை புதுப்பிக்கும் பணி, சமீபத்தில் நடந்தது. சிறை அறையின் தரையில், புதிய, 'டைல்ஸ்' கற்கள் பதிக்கப்பட்டன. சுவர்களில், புதிய வண்ணம் பூசப்பட்டது. கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டன.இதை படம் பிடித்து, லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், 93ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்த்தர் ரோடு சிறையில், ஒரு பகுதியை முழுவதுமாக இடித்துவிட்டு, அங்கு புதிதாக, 12 அறைகள் உள்ள சிறை வளாகத்தை உருவாக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த

Advertisement

புதிய வளாகத்தில், நல்ல காற்று, வெளிச்சம் உடைய, 12 புதிய அறைகள் கட்டப்பட உள்ளன. மேலும், சுத்தமான கழிப்பறைகள், கைதிகள் சுற்றி வர திறந்தவெளி என, ஐரோப்பிய தரத்தில் உருவாக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய சிறை வளாகம், ஆறு மாதத்தில் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிகிறது.இந்திய சிறைச் சாலைகளை காரணம் காட்டி, சரணடைய மறுக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற, வெளிநாடு தப்பிச் சென்ற குற்றவாளிகளை, இந்தியா கொண்டு வருவதற்காகவே, இந்த புதிய சிறை வளாகம் கட்டப்படுகிறது. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
03-செப்-201800:26:39 IST Report Abuse

kadhiravanவசதியான அறைகொடுங்க.., தினம் மூணு தடவை எலக்ட்ரிக் ஷாக் கொடுப்போம்முன்னு சொல்லிவைங்க..,அவங்க இங்க வரட்டும்..,

Rate this:
Ramesh - chennai,இந்தியா
03-செப்-201800:16:45 IST Report Abuse

Ramesh2025 க்குள் எல்லா சிறைகளும் ஐரோப்பிய தரத்தில் அமைக்கப்படும். வீடுகள் தரம் குறைந்தவர்கள் குற்றம் செய்து இந்த ஐரோப்பிய சிறை வாசம் அனுபவிக்கவும்

Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
02-செப்-201822:39:56 IST Report Abuse

மாயவரத்தான் அதுல தமிழ்நாட்டுக்கு 4 ரூம் ஒதுக்கிடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ....

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X