முடிவு எடுக்கும் போது சொல்கிறேன்: சந்திரசேகர ராவ்| Dinamalar

முடிவு எடுக்கும் போது சொல்கிறேன்: சந்திரசேகர ராவ்

Added : செப் 02, 2018 | கருத்துகள் (6+ 8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முடிவு,எடுக்கும் போது,சொல்கிறேன்,சந்திரசேகர ராவ்,தெலுங்கானா

ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபை கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் போது சொல்வதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் ஆட்சி அமைத்த தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 4 ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி நடந்த பேரணியில், சட்டசபை கலைப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபை கலைப்பு இல்லை என சந்திரசேகர ராவ் நழுவியுள்ளார்.


இப்போது இல்லை:

கூட்டத்தில் அவர் பேசியதாவது: சட்டசபையை கலைத்து விரைவில் தேர்தலை சந்திக்க உள்ளதாக மீடியாக்கள் தகவல் பரப்பின. தெலுங்கானாவின் எதிர்கால நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பினை டி.ஆர்.எஸ்., கட்சி தொண்டர்கள் எனக்கு கொடுத்துள்ளனர். முடிவினை எடுக்கும் போது நான் சொல்கிறேன்.


அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்:

தெலுங்கானாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், பகிரதா திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கவில்லை எனில், அடுத்த தேர்தலை நான் சந்திக்க போவதில்லை. இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் தைரியமாக இவ்வாறு கூறிவிட முடியாது.


டில்லியின் கையில் தமிழகம்:

தமிழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில கட்சிகளே ஆட்சி நடத்துகின்றன. அதே போல் தான் தெலுங்கானாவிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒருபோதும் டில்லி தலைமைக்கு தெலுங்கானா அடிபணியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
03-செப்-201810:18:58 IST Report Abuse
R S GOPHALA ஒத வாங்க போறாரு. நம்ம மக்கள் நெனச்சா எல்லா இளவசங்களையும் வாங்கிகிட்டு வேற யாருக்காவது ஓட்ட போட்டுடுவாங்க. இவனெல்லாம் சரியான சுயநல அரசியல்வாதிங்கோ. கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த திட்டம். இவன் கண்டிப்பாக தோற்பான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-செப்-201807:59:07 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் தைரியமாக இவ்வாறு கூறிவிட முடியாது. எல்லோரும் உங்களை விட அதிகமாவே கூறுவார்கள்... ஆனால் செய்யமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-செப்-201807:58:14 IST Report Abuse
Srinivasan Kannaiya கனவு கண்டு விட்டு பேசுவதே இவரது பொழப்பாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X