சொன்னதை செய்வேன்: அழகிரி ஆவேசம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சொன்னதை,செய்வேன்,அழகிரி,ஆவேசம்

சென்னை : மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு 30வது நாளை அனுசரிக்கும் வகையில் சென்னையில் நாளை மறுநாள் பேரணி நடத்துவது உறுதி என அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தெரிவித்துள்ளார். ''நான் கருணாநிதியின் மகன் சொன்னதை செய்வேன்,'' என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில் பேரணிக்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா என தி.மு.க.,வினர் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆகஸ்ட் 7ல் மரணம் அடைந்தார். அவரது மறைவின் 30வது தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, 'சென்னையில், அமைதி பேரணி நடத்தப்படும்; அதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்' என அழகிரி அறிவித்தார்.
பேரணி நடத்துவது தொடர்பாக மதுரையில் ஆதரவாளர்களுடன்

10 நாட்களாக தொடர் ஆலோசனையும் நடத்தினார். இதற்கிடையே, 'கட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்' என அறிவித்தார். அவர் இறங்கி வந்தது தி.மு.க.,வினரை யோசிக்க வைத்தது.
'அழகிரியை கட்சியில் சேர்ப்பதில் என்ன தவறு; சேர்த்தால் கட்சிக்கு இன்னும் பலம் கூடும்' என தொண்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் கட்சி தலைமையும், இது தொடர்பாக, ஆலோசனை நடத்தி வருகிறது.

அதற்கேற்ப வரும் 8ம்தேதி சென்னையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. அதில் அழகிரியை கட்சியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், மதுரையில் நேற்று அழகிரி கூறியதாவது: நான் கருணாநிதியின் மகன்; சொன்னதை செய்வேன். சென்னையில் செப்.,5ல் அறிவித்தபடி அமைதி பேரணி நடக்கும். அதில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர். ஸ்டாலினை தலைவராக ஏற்பதாக அறிவித்த பின், கட்சியில் சேர அழைப்பு வராதது

குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பின் அவர்வெளியிட்ட அறிக்கை: அமைதி பேரணி செப்., 5 காலை 10:00 மணிக்கு திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் அருகிலிருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தை அடையும்; அங்கு அஞ்சலி செலுத்தப்படும். தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள் அன்று காலை 10:00 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகே வர வேண்டும். பேரணியில் எவ்வித ஆரவாரம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு இடம் தரக்கூடாது. போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
தொண்டர்கள் வாகனங்களை தீவுத்திடல் மற்றும் மெரினா கடற்கரை உட்பகுதியில் நிறுத்தி விட்டு வர வேண்டும். ஊர்களுக்கு திரும்பி செல்லும் வரை கவனமாக எச்சரிக்கையுடன் செல்லவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து கருணாநிதியின் உண்மை தொண்டர்களாக அஞ்சலி செலுத்துவோம். இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (48+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-செப்-201800:59:34 IST Report Abuse

Mani . V"பழனி" திரைப்படத்தில், 'மதுரையில பஸ் ஓடுது, கோயம்புத்தூருல லாரி ஓடுது, மெட்ராஸிலா டாக்ஸி ஓடுது', 'மதுரையில பஸ் ஓடுது, கோயம்புத்தூருல லாரி ஓடுது, மெட்ராஸிலா டாக்ஸி ஓடுது அது வேல்டுக்கே தெரியும். மாப்பிள்ளைக்கு என்ன ஓடுது?' என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அதாவது, சென்னையில் பேரணி நடக்கும். ஆனால் அது யார் நடத்தும் பேரணி? லட்சம் பேர் வருவர். அவர்கள் அனைவரும் வேலைக்கு வருபவர்களாக இருக்கும்.

Rate this:
ஏழை தாயின் மகன் - coimbatore,இந்தியா
03-செப்-201822:12:40 IST Report Abuse

ஏழை தாயின் மகன் இந்த மலை முழுங்கிய என்ன பண்ணலாம்?

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
03-செப்-201820:28:56 IST Report Abuse

Sathish இப்படி ஏதாவது செய்து திராவிட கட்சிகள் தங்களுக்குளேயே அடித்துக்கொண்டு அழிந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும்.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X