மத மாற்றத்தால் நாட்டுக்கு ஆபத்து; பா.ஜ., கையேட்டில் அதிர்ச்சி தகவல் Dinamalar
பதிவு செய்த நாள் :
மத மாற்றத்தால் நாட்டுக்கு ஆபத்து
பா.ஜ., கையேட்டில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : 'நக்சலைட்டுகளும், வலுக்கட்டாய மத மாற்ற மும், நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தல்கள்' என, பா.ஜ.,வின், பயிற்சி கையேட்டில் கூறப்பட்டு உள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,மத மாற்றத்தால்,நாட்டுக்கு ஆபத்து


மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ.,வின் பயிற்சி கையேடு, அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு, பா.ஜ., சித்தாந்தத்தை விளக்கிக் கூறும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நக்சலைட்டுகள், பயங்கரவாத அமைப்புகளின் துணையுடன், வட கிழக்கு மாநிலங்களில் துடிப்புடன் செயல்பட்டு

வருகின்றனர். இவர்கள், பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த, சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.

நக்சலைட் அமைப்புகளுக்கு, அண்டை நாடுகளான, சீனா, பாக்.,கில் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த இயக்கங்கள், நாட்டுக்கு பெரியளவில் அச்சுறுத்தல்களாக திகழ்கின்றன. வலுக்கட்டாயமாக மத மாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது, பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. 'ஜிஹாதி, மாஸிஹி' என்ற பெயர்களில், பல ஆண்டுகளாக, வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்ய சதி வேலைகள் நடக்கின்றன.

இதன் மூலம், நாட்டு மக்கள் தொகையில், மத அடிப்படையில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. மத மாற்றங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த சில அமைப்புகளும் ஈடுபட்டு உள்ளன. இதற்கு, அதிக பண பலம், ஆள் பலம் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் மத மாற்றத்தின் வேகம், மிக அதிகளவில் உள்ளது.

Advertisement

இதனால், அந்த மாநிலங்களில் உள்ள மக்கள், காலப்போக்கில் முழுமையாக மத மாற்றம் செய்யப்படும் நிலை உள்ளது.

வலுக்கட்டாய மத மாற்றத்தால், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், அமைதியான சூழல் பாதிக்கப்படும் ஆபத்துகள் உள்ளன; இதற்கு, சில அரசியல் கட்சிகளும் துணைபோகின்றன. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள, காங்.,கின் முந்தைய, 60 ஆண்டு ஆட்சிக் காலத்தில், கிராமப்புற மக்களில், 60 சதவீதம் பேர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-செப்-201809:37:28 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மதம் அழிவை தரும். மதத்துடன் அரசியல் கலந்தால் பேரழிவை தரும்.. மதம் பிடித்து அழியுங்கள்..

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
04-செப்-201814:21:24 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்ஹிந்துவுக்காளாகிய நாம் பல வழிகளில் வழிபட்டாலும் நமக்கு அடிப்படையில் கலாச்சாரம் ஒன்றுதான். அதன் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும். நாம் ஒன்றுபட்டால் மற்றது தானே அடங்கும். நம் முன்னோர் வீழ்ந்ததெல்லாம் புல்லுருவிகளால் தான். ஒற்றுமை இல்லையேல் நம் கலாச்சாரம் அடியோடு மாற்றப்படும்.

Rate this:
K Rajendran - Ahmedabad,இந்தியா
04-செப்-201800:45:06 IST Report Abuse

K Rajendranமுதலில் பிஜேபி இந்துக்கள் என்றால் என்ன என்று தெளிவாக கூறட்டும். மாமிசம் உண்ணும் மக்கள் இந்துவாக இருக்க முடியுமா? முடியாதா? ஒன்று செய்யுங்கள், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் தவிர்த்து மற்ற அனைவரது சம்பிராதயங்களும் இந்து மதம் சார்ந்தது என்று தெளிவாக கூறவும். மேலும் சம்ஸ்கிருதம் என்பது ஒரு சாதாரண, பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளாத மொழி, எனவே அதை இன்றே விட்டுவிட்டு தமிழ் உட்பட அணைத்து மொழிகளிலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக கோவில்களில் உள்ள சத்துக்களை ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கு செலவு செய்ய வேண்டும். குறிப்பாக, சாதி அல்லது சர்நேம் என்று தன பெயரில் எழுதினால் ஆடு தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவியுங்கள். பிறகு மதம் பற்றி பேசுங்கள்.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
05-செப்-201806:31:27 IST Report Abuse

Darmavanசமஸ்கிருதத்தின் மேல் உனக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு அது உன்னை என்ன செய்தது.. ஏற்றுக்கொள்பவர்கள் வேண்டாம் என்று சொல்ல நீ யார். இவ்வளவு காழ்ப்புணர்ச்சி உள்ள நீ பெரிய சீர்திருத்தவாதிபோல் பேசுவதை நிறுத்து....

Rate this:
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X