'அறநிலைய துறையின் வசமுள்ள கோவில்களை மீட்க வேண்டும்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'அறநிலைய துறையின் வசமுள்ள
கோவில்களை மீட்க வேண்டும்'

சென்னை : ''ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, உடனடியாக மீட்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா வலியுறுத்தினார்.

எச்.ராஜா,அறநிலைய துறை,வசமுள்ள,கோவில்களை,மீட்க வேண்டும்



ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று உண்ணாவிரதப் போராட் டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை வகித்த, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேசியதாவது:


தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து, 665 மனைகள்; 1.23 லட்சம் குத்தகை தாரர்கள் உள்ளனர். இவை எல்லாம், அரசின் பதிவேட்டில் மட்டுமே உள்ளன.

அறநிலையத் துறை அதி காரிகள், கோவில்களின் வருவாயை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர். கோவில்களுக்கு சொந்தமான இடங்கள், அரசு துறைகளாலும், தனியாராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.


கோவில்களின் உண்டியல் காணிக்கை, முறையாக எண்ணப்படுவதுஇல்லை. கும்பாபிஷேகம் நடத்தவும், அறநிலையத் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அறநிலையத் துறை அதிகாரி களாக உள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


ஆகம விதிகளை மதிக்காத, அறநிலையத்துறை அலுவலகங்களை, கோவில் வளாகங்களில் அமைக்கக் கூடாது. கோவில்களின் சாவிகள், செயல் அலுவலர்களிடம் இருக்கும் நிலையில், பல்வேறு கோவில்களில் சிலை திருட்டு நடந்து உள்ளது. கொள்ளையடிப்பதற்காகவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள உடைமைகள் குறித்து, எந்த பதிவேடும் பராமரிக்கப்படவில்லை.


Advertisement

'ஆறு வாரங்களில், கோவில் நிலங்களை மீட்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதி, மகாதேவன் உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும், தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அறநிலையத்துறை வசமிருக்கும் கோவில்களை, ஹிந்து அமைப்புகள் உடனே மீட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன் பேசியதாவது: ஓர் இடத்தில் கோவில், அழகிய சிலைகள் இருந்தால் கண்டு கொள்ளாத அரசு, உண்டியல் வருவாய் இருந்தால் மட்டும், ஓடி வந்து கைப்பற்றிக் கொள்கிறது. ஆனாலும், கோவில்களை பராமரிப்பது இல்லை.


கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், அவர்களின் மத வழிபாட்டு தலங்களை, அவர்களே நிர்வகிப்பது போல, ஹிந்து கோவில்களை, ஹிந்துக்களே நிர்வகிக்க வேண்டும். கோவில்களில் நடக்கும் கொள்ளையை, அனைவரும் தட்டிக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

'வாரியார் சொன்னது நடக்கிறது'

விசுவ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர், ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாவது: கிருபானந்த வாரியார் மேடைகளில் பேசும் போது, 'ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு யானையை அரசு வளர்க்கிறது. அது, அகோர பசியுடன் சாப்பிட்டு கொண்டே இருக்கிறது. அதற்கு, அறநிலையத் துறை செயல் அலுவலர் என பெயர்' என்றார். 1960ல் அவர் பேசியதை, நாம் இப்போது உணர்கிறோம். இனியும், 'திராவிடன்' என்ற பெயரில், கட்சி நடத்துவோரை நம்பினால், நம் வழிபாட்டு உரிமைகள் பறிபோகும். இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
04-செப்-201811:11:39 IST Report Abuse

Rayஅடகு வைத்த பொருள்களை மீட்டு விற்க அணுகுங்கள்

Rate this:
Anandan - chennai,இந்தியா
03-செப்-201823:29:09 IST Report Abuse

Anandanடிவிஎஸ் ஐயங்கார் பெயர் திருச்சி கோவில் சிலை திருட்டில் அடி பட்ட போது அண்ணன் ராஜா எங்கே போனார்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
03-செப்-201822:58:16 IST Report Abuse

Bhaskaranதென்தமிழ்நாட்டில் பாதி சிவன்கோவில்கள் சமணரிடமிருந்து கைப்பற்றி மாற்றியவை

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X