கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் : ஸ்டாலின் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் : ஸ்டாலின்

Added : செப் 03, 2018 | கருத்துகள் (90)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருச்சி : திருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டரிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 24ம் தேதி முதல்வர் இங்கு பார்வையிட்டு, பணிகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளித்தார். ஆனால் இன்னும் 40 சதவீதம் பணி கூட முடியவில்லை.

ஆய்வுக்கு வந்த போது காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது இல்லை என அறிவுபூர்வமான கருத்து ஒன்றை முதல்வர் கூறினார். அவர் சொன்ன கருத்து,ரோம் நகரம் தீபிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை நினைவுபடுத்துகிறது. நீரோ மன்னனின் வாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார். காய்ச்சல் சொல்லாமல் வருகிறது கமிஷனை பொறுத்தவரை சொல்லிக் கொண்டு வருகிறது.

மேட்டூர் அணை கடந்த மாதம் 19 ம் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலை தான் உள்ளது. கமிஷனை தூர்வாருகிறார்கள். ஆனால் கால்வாய்களை தூர்வாரவில்லை. இது ரூ.5000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதையே காட்டுகிறது. ஊழல் மற்றும் மணல் கொள்ளையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, மதகுகள் உடைய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக அரசின் நிலை பற்றி திமுக மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி எந்த விளக்கமும் அரசு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிப்பதில் தான் அரசு கவனமாக இருந்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்எல்ஏ.,க்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் நல திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
03-செப்-201822:11:41 IST Report Abuse
Viswanathan அனைத்தும் தமிழ் இன தலைவரிடம் எடுத்த பயிற்சி
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
03-செப்-201816:52:57 IST Report Abuse
kowsik Rishi மு.கருணாநிதி கூட்டம் இப்படி தான் எல்லா அராஜகமும், அத்துமீறலும், ஆக்கிரமிப்பும் செய்துகொண்டு - மற்றவர்களை பற்றி அயோ அயோ என்று கத்தும் மு.கருணாநிதி ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாதவர் ஓட்டு போய் விடுமே என்ற ஒரே சொல்லில் ஆக்கிரமிப்புகளை நீர்நிலை, வீதி சாலை ஹை வெய்ஸ் என்று எல்லாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளது அவர் மறைந்த பின்பும் நான் உங்களுக்கெல்லாம் ஆக்ரமிப்பு செய்ய அனுமணித்தீனே என்று சொல்லி மு.கருணாநிதி அல்பாறைகளை வைத்து தமிழ் மக்கள் தேசிய சொத்து அரசு சொத்தை - ஆக்ரமித்து கொண்டு படுத்துவிட்டார் தமிழ் மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் - மு.கருணாநிதியின் கு. க. திமுகவை கி வீரமணி கட்சி போலெ ஆக்கிவிடுங்கள் அது தான் தமிழ் மக்களுக்கு நல்லது
Rate this:
Share this comment
Cancel
03-செப்-201816:28:16 IST Report Abuse
ராமகிருஷ்ணன் நீயும் உங்கொப்பனும் உன் குடும்பத்தாரும் உன் கட்சிஆட்களும் தான் தமிழ்நாட்டை அதிகம் தூர் வாரியவர்கள்.அடுத்தவர்களை பற்றி கேட்க எந்த யோக்கியதையும் உனக்கில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X