பா.ஜ.,வை விமர்சித்த பெண் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வை விமர்சித்த பெண் கைது

Updated : செப் 03, 2018 | Added : செப் 03, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

தூத்துக்குடி : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது, கனடாவில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஷோபியா(28), பா.ஜ., குறித்து தமிழிசையிடம் 'பாசிஷ பா.ஜ.,' என விமர்சித்தார்.

விமானம் மதுரைக்கு வந்ததும், தமிழிசை இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஷோபியா மீது வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை திருநெல்வேலி கொக்கிரக்குளம் சிறையில் 15 நாள் காவலில்அடைக்க உத்தரவிட்டார்

இந்நிலையில் ஷோபியாவின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஸ்டாலின் கண்டனம்:


ஷோபியாவின் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கருத்துரிமைக்கு எதிரான கைது நடவடிக்கை கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட ஷோபியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஷோபியா மட்டுமல்ல நானும் சொல்கிறேன், 'பா.ஜ.,வின் பாசிச ஆட்சி ஒழிக'. இப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - Chennai,இந்தியா
04-செப்-201815:53:53 IST Report Abuse
Tamil Selvan நானும் சொல்கிறேன் "திருடர்கள் முன்னேற்ற கழகம்" ஒழிக.
Rate this:
Share this comment
Cancel
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
04-செப்-201813:22:49 IST Report Abuse
Navn எல்லாம் சரி, அந்த நீதிபதிக்கு ....
Rate this:
Share this comment
Cancel
Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
04-செப்-201812:40:12 IST Report Abuse
Nimalakumar Balasingam பி ஜே பி மீண்டும் தனது முடடாள் தனத்தை காட்டிவிட்ட்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X