பணியை முடிக்காமல் திரும்பாதீங்க! அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணியை முடிக்காமல் திரும்பாதீங்க!
அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

'முக்கொம்பு அணையின் தற்காலிக சீரமைப்பு பணி முடிந்த பிறகே, அதிகாரிகள் சென்னை திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பணியை,முடிக்காமல்,திரும்பாதீங்க,அதிகாரிகளுக்கு,முதல்வர், பழனிசாமி,உத்தரவு


திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையின் ஒன்பது மதகுகள், ஆகஸ்ட், 22ல் உடைந்து விழுந்தன.

தனியார் நிறுவனம் :


இதனால், கொள்ளிடம் ஆற்றின் வழியாக, தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது.

இந்த நீரை தடுத்து நிறுத்துவதற்காக, அணையில் தற்காலிக சீரமைப்பு பணியை அரசு துவக்கிஉள்ளது. சில தினங்களுக்கு முன், முக்கொம்பு அணையை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, தற்காலிக சீரமைப்பு பணிக்காக, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். இந்த நிதியில், சீரமைப்பு பணியை, தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகிறது.

பணி துவங்கி, 10 நாட்களாகியும், மணல் மூட்டைகளை அடுக்கி, நீரை தடுக்கும் நடவடிக்கைகள் முடியவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முக்கொம்பு அணைக்கு சென்றார். தற்காலிக சீரமைப்பு பணி, 40 சதவீதம் கூட முடியவில்லை என, குற்றம் சாட்டினார்.

சாகுபடிக்கு நீர் கேட்டு விவசாயிகளும் போராட்டத்தை துவக்கி உள்ளதால், பணியை விரைந்து முடிக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement



அதிகாரிகள் குழு :


இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், பக்தவச்சலம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், சென்னையில் இருந்து நேற்று, முக்கொம்பு அணைக்கு சென்றனர். 'சீரமைப்பு பணி முடிந்த பிறகே, அதிகாரிகள் குழுவினர் சென்னை திரும்ப வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Bengaluru,இந்தியா
04-செப்-201815:48:30 IST Report Abuse

Nathanநமக்கு இயற்கை எத்தனை முறை பாடம் கற்பித்தாலும் வரும் முன் காப்போம் என்ற எண்ணம் ஆளும் தலைவர்களுக்கு தோன்றுவதே இல்லை.... ஏனெனில் பாதிக்கப் படுவது நாமில்லையே.....

Rate this:
Looking for the summer - Ch2Ch,இந்தியா
04-செப்-201814:17:08 IST Report Abuse

Looking for the summerஆமாப்பா முடிக்க முடியலைன்னா அப்படியே மோடிஜி விடற ராக்கெட்ல ஏறி செவ்வாய் கிரஹத்துக்கு போய்டுங்க. நாங்க சீனாவுல இருந்து ஆட்களை கூட்டி வந்து முடிச்சிடுவோம்.

Rate this:
ராஜேஷ் - Pattukkottai,இந்தியா
04-செப்-201820:53:48 IST Report Abuse

ராஜேஷ்அரசாங்கத்தை எல்லாத்துக்கும் குறை சொல்வதே வேலையாவசித்துக்கோங்க .......

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-செப்-201812:14:23 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஅதிகாரிகள் நல்லவர்களாக இருந்திருந்தால் இந்த பாலமே உடைந்திருக்காது. கமிஷன் கிடைத்தால் பணிமுடிந்தபிறகுகூட காவிரி கரையில் தங்கியிருப்பார்கள்...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X