'பெட்ரோல், டீசல் மீது கலால் வரி குறையாது' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பெட்ரோல், டீசல் மீது
கலால் வரி குறையாது'

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை, புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அவற்றின் மீதான கலால் வரியை குறைக்கும் வாய்ப்பு இல்லை என, மத்திய அரசு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

petrol,diesel,பெட்ரோல்,டீசல்,கலால் வரி,குறையாது


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில், பெட்ரோல்,

டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் நேற்று, பெட்ரோல், லிட்டருக்கு, 79.31 ரூபாயாகவும்; டீசல், லிட்டருக்கு, 71.34 ரூபாயாகவும் விற்கப்பட்டது.

இந்நிலையில், மூத்த அரசு அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71.54 ரூபாயாக உள்ளது. இதனால், ஏற்றுமதி செலவினங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரித்துள்ளன.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என,

Advertisement

எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இவற்றின் மீதான கலால் வரியை குறைத்தால், அது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை பெரியளவில் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
05-செப்-201819:27:55 IST Report Abuse

Gopiஎதிர்பாராததை அரசாங்கம் எதிர்பார்க்கவேண்டிய தருணம். வரி கட்டமைப்பில் கச்சா எண்ணெய் மற்றும் சாராயத்தில் வரும் பணத்தை கொண்டு குடும்பம் நடத்தலாம் என்ற மனநிலையை மத்திய மாநில அரசாங்கங்கள் விடுத்து, நாட்டில் அதிகப்படியான ஜெட்ரோபா (இயற்கை டீசல்) உற்பத்தி மற்றும் மாற்று எரிபொருளில் கவனம் செலுத்தவேண்டும். கரும்பு விவசாயத்தில் வரும் மொலாசஸ் கொண்டு வரும் எத்தில் அல்கஹால் போன்ற வற்றை கலந்து விற்பனை செய்து விலைவாசி ஏற்றத்தை குறைக்க வழிவகை செய்யவேண்டும்.

Rate this:
05-செப்-201819:11:24 IST Report Abuse

கார்த்திக் சுப்பிரமணிஉலகம் முழுக்க பெட்ரோல் விலை கூடிக்கிட்டுதான் இருக்கு ... டாலர் விலையும் அப்படித்தானே. பெருளாதாரமும் தெரியாது.. ஒரு புண்ணாக்கும் புரியாது.. அவுன்னா மோடியை எதிர்க்க கிளம்பிடுவானுக.. அறிவை பயன் படுத்துங்க.. உலக நிகழ்வை பாருங்கள். தேவைன்னா நடந்து போக வேண்டியதானே???

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-செப்-201817:14:37 IST Report Abuse

Pugazh Vஅரூராங்... வரிகளை அதிகரித்த போதும் உலக வங்கியிடம் பீஜேபீ அரசு கடன் வாங்காமல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 9.35 பில்லியன் டாலர்களை - ரிபீட் - 9.35 பில்லியன் டாலர்களை கடனாக பீஜேபீ அரசு வாங்கி யிருக்கிறது. கூகிளில் பார்க்க. நன்றி

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X