அடுத்த தலைமை நீதிபதி: கோகோய் பெயர் பரிந்துரை Dinamalar
பதிவு செய்த நாள் :
அடுத்த தலைமை நீதிபதி
கோகோய் பெயர் பரிந்துரை

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயரை, ஓய்வு பெற உள்ள, தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பரிந்துரைத்துள்ளார்.

Ranjan Gogoi,சுப்ரீம் கோர்ட்,தலைமை நீதிபதி,கோகோய்,பெயர்,பரிந்துரை


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்., 2ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து, தன் பரிந்துரையை அளிக்கும்படி, மிஸ்ராவிடம், மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை உள்ள மரபின்படி, மூத்த நீதிபதியே, தலைமை நீதிபதியாக

நியமிக்கப்படுவார். ஆனால், இந்தாண்டு ஜனவரியில், மூத்த நீதிபதிகளான, ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, நீதிபதிகள், செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியதுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். மூத்த நீதிபதிகள் என்ற அடிப்படையில், தங்களுக்கு சரியான அமர்வு ஒதுக்கப்படுவதில்லை என்பது உட்பட, பல்வேறு குற்றச்சாட்டுகளை, அவர்கள் முன் வைத்தனர்.

தற்போது, நீதிபதி செலமேஸ்வர் ஓய்வு பெற்று உள்ளதால், அதற்கடுத்த மூத்த நீதிபதியாக, ரஞ்சன் கோகோய் உள்ளார். அவரது பெயரை, தீபக் மிஸ்ரா பரிந்துரைப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், 'அடுத்த தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படுவார்' என,

Advertisement

சமீபத்தில் செய்திகள் வெளியாயின. தற்போது அதை உறுதி செய்யும் வகையில், நீதிபதி ரஞ்சன் கோகோயை, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை, பிரதமருக்கு அனுப்பி வைக்கும். அவரது முன்மொழிவுடன், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை, ஜனாதிபதி அறிவிப்பார். அக்., 3ல், அடுத்த தலைமை நீதிபதி பதவியேற்க உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
05-செப்-201817:52:10 IST Report Abuse

Darmavanநீதித்துறை அரசியலாக்கப்பட்டு விட்டது ..அதன் கௌரவமும் 4 நீதிபதிகள் தெருவிக்கு வந்த பிறகு பறிபோயிற்று .நீதி சரியாக கிடைக்குமா அல்லது முன்பேயே தீர்மானிக்கப்பட்டுவிடுமா என்பதே கேள்வி.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05-செப்-201817:43:20 IST Report Abuse

Endrum Indianரஞ்சன் கோகோய் மிக மிக மிக நல்லவர். 1 ) செலமேஷ்வர் கூட சேர்ந்து "எங்களுக்கு சரியான அமர்வு ஒதுக்கப்படுவதில்லை என்பது உட்பட, பல்வேறு குற்றச்சாட்டுகளை" மிஸ்ரா மீது கூறியவர். 2 ) இவரது ஒரு வழக்கின் தீர்ப்பு - ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கீழ் தள்ளிவிட்டு ஒருவன் அவளை கற்பழித்தான் அதற்கு கீழ் கோர்ட்டும், ஹை கோர்ட்டும் அவனுக்கு மரண தண்டனை விதித்தது, உச்ச நீதி மன்றத்தில் இவரிடம் அந்த வழக்கு வந்த போது அவர் அதை ஆயுள் தண்டனை ஆக்கினார் இதை காரணம் காட்டி "அவன் அவளை கொல்வதற்காக தள்ளி விடவில்லை, மல்லாக்க படுக்க வைக்கத்தான் என்று" அவ்வளவு நல்லவர் இவர்.

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
05-செப்-201813:23:14 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்இவர் காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பா அஸ்ஸாமில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவர்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X