'விமான பயண கட்டணம் ஆட்டோவை விட குறைவு' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'விமான பயண கட்டணம்
ஆட்டோவை விட குறைவு'

புதுடில்லி : ஆட்டோவில் செல்வதை விட, விமானத்தில் பயணிக்க, மிகவும் குறைவாக செலவாவதாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

ஜெயந்த் சின்ஹா,விமானம்,பயண கட்டணம்,ஆட்டோ,குறைவு


பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சருமான, ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: தற்போது, ஆட்டோவில் செல்வதற்கு ஆகும் செலவை விட, குறைவான கட்டணமே, விமான பயணத்திற்கு

பெறப்படுகிறது. ஆட்டோவில் இருவர் செல்ல, கி.மீ.,க்கு ஐந்து ரூபாய் வீதம், இருவரிடம், 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், விமானத்தில் பயணிக்க, கி.மீ.,க்கு, 4 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது. இதனால், விமான பயணத்தில், கி.மீ.,க்கு, ஒரு ரூபாய் மிச்சமாகிறது.

கட்டணம் குறைவாக இருப்பதால், நாளுக்கு நாள், அதிகம் பேர், விமான பயணத்தை விரும்புகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு, 11 கோடி பேர், விமானத்தில் பயணித்தனர். நடப்பாண்டில், விமான பயணியர் எண்ணிக்கை, 20 கோடியை எட்டவுள்ளது.

ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கையை விட, விமானத்தில்

Advertisement

பயணிப்போர் எண்ணிக்கை அதிகம். நான்கு ஆண்டுகளில், விமான பயணியர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'விமான கட்டணம், ஆட்டோ கட்டணத்தை விட குறைவானது' என, பிப்ரவரியிலும், அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (21+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-201819:57:34 IST Report Abuse

MuhammadRabeekIssadeenமீனாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்துக்கு எவ்வளவுசார்?

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
05-செப்-201816:51:50 IST Report Abuse

pradeesh parthasarathyஎன்னது செல்லூர் ராஜுவுக்கு போட்டியாக ஜெயந்த் சின்ஹானு ஒரு ஆள் டெல்லியிலிருந்து கிளம்பியிருக்காராமே ...

Rate this:
05-செப்-201813:46:22 IST Report Abuse

ஆப்புஆட்டோ அடுத்த தெரு போவதற்கும் மினிமம் 25 ரூவா கேக்குறான். பேசாம நடந்து போனா ஃப்ரீ. அப்பிடியெ நிறைய பணம் மிச்சம் பண்ணனும்னா, சென்னையிலிருந்து நடந்தே டில்லிக்கு போயிடுங்க. ஆயிரக் கணக்கில் மச்சம் பண்ணலாம்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X