'ஜெ., மரணத்தில் சந்தேகங்கள் தீரவில்லை' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஜெ., மரணத்தில்
சந்தேகங்கள் தீரவில்லை'

சென்னை : 'ஜெ., மரணம் தொடர்பாக எழுப்பிய சந்தேகங்கள் இன்னும் தீரவில்லை' என, ஜெ., அண்ணன் மகள் தீபா மற்றும் தி.மு.க., பிரமுகர், டாக்டர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா,சந்தேகங்கள்,தீரவில்லை


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டி யிட்ட, டாக்டர் சரவணன், ஜெ., அண்ணன் மகள் தீபா, முன்னாள், எம்.எல்.ஏ., ஜெகதீசன் உட்பட, ஆறு பேரிடம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது. சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு, அவர்கள் பதில் அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: டாக்டர் சரவணன்: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் படிவத்தில், ஜெ., கைரேகை இடம் பெற்றிருந்தது.

'அந்த ரேகை சந்தேகத்திற்குரியதாக உள்ளது' என, ஏற்கனவே வழங்கிய மனுவில் குறிப்பிட்டிருந்தேன். நான் கூறிய சந்தேகங்கள் இன்னும் நீடிக்கின்றன. என்னிடம், ஜெ., கைரேகை தொடர்பாக, எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

முன்னாள், எம்.எல்.ஏ., ஜெகதீசன்: மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், முதல் வாரம் அனைவரும், அவரை பார்த்தோம். ஆனால், மருத்துவமனையில், ஜெ., இருந்த, 75 நாட்களில் யாரும் பார்க்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலை ஏற்பட்ட போதும், அதிகாரிகளால், ஜெ.,வை சந்திக்க முடியவில்லை. வேறு வழியின்றி, அவர்கள் ஏரியை திறந்து விட்டதால், பெரும் சேதம் ஏற்பட்டது. இதை எல்லாம் சுட்டிக்காட்டி, சாட்சிகளை விசாரிக்கும்படி கூறியுள்ளேன்.

தீபா: அரசியல் ரீதியான கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டன. வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை, சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேட்டார்; அதனால், எதிர்ப்பு தெரிவித்தேன். எங்கள் குடும்பத்திற்கும், அத்தைக்கும் உறவு விட்டுப்போனது போன்ற கேள்விகள் இடம் பெற்றன; அதற்கும் விளக்கம் அளித்தேன்.

Advertisement

அ.தி.மு.க., தொண்டர்கள் என் வீட்டிற்கு வந்தது குறித்தும், பன்னீர்செல்வத்தை சந்தித்தது தொடர்பாகவும் கேட்டனர். மருத்துவமனையில், ஜெ.,வை பார்க்க, என்னை அனுமதிக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்த, கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும்'

சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது: குறுக்கு விசாரணையில், சாட்சிகள், அடிப்படை ஆதாரமின்றி, யூகத்தின் அடிப்படையில், புகார் கூறியதை தெளிவுபடுத்தி உள்ளோம். ஜெ., கைரேகை தொடர்பாக, டாக்டர் சரவணன் தனிப்பட்ட முறையில், வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர், அடிப்படை ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. ஜெ., அண்ணன் மகள் தீபா, 2006ல், கடைசியாக, ஜெ.,வை பார்த்துள்ளார். விசாரணை கமிஷன் நேர்மையாக செயல்படுகிறதா என்பது உட்பட, அனைத்து கேள்விகளுக்கும், முற்றுப்புள்ளி வைக்க, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-செப்-201820:24:22 IST Report Abuse

Bhaskaranசசியை காவலில் eduththu விசாரித்தால் உண்மைவெளிவரும் ஆனால் நேர்மையான காவலர்களை வைத்து விசாரிக்கணும் விலைபோகிறவர்களை வைத்து விசாரித்தால் கோவிந்தா தான்

Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
05-செப்-201815:44:09 IST Report Abuse

ShanuThere is no doubt. Sasukala family ed jj

Rate this:
05-செப்-201812:07:28 IST Report Abuse

ஆப்புபொறுங்க....நீதியரசர் ஆறுமுகசாமி இன்னும் ஒரு 10 வருஷம் விசாரிச்சுட்டு அவருக்கும் புரியலைன்னு ஒரு 12,900 பக்கம் அறிக்கை குடுப்பாரு. மக்கள் அப்போ மறந்தே போயிருவாங்க. அவரைக் குழப்பவே பலர் வந்து சாட்சி சொல்றாங்க.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X