பாலம் இடிந்து விபத்து கோல்கட்டாவில் ஒருவர் பலி| Dinamalar

பாலம் இடிந்து விபத்து கோல்கட்டாவில் ஒருவர் பலி

Added : செப் 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாலம் இடிந்து விபத்து கோல்கட்டாவில் ஒருவர் பலி

கோல்கட்டா: கோல்கட்டாவில், 40 ஆண்டு பழமையான பாலம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார்; பலர் படுகாயம் அடைந்தனர். மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மாநில தலைநகர் கோல்கட்டாவின், மாஜேர்ஹாட் பகுதியில், 40 ஆண்டு பழமை வாய்ந்த பாலம், நேற்று மாலை, திடீரென இடிந்து விழுந்தது.இடிபாடுகளில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார்; 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியோர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிந்தது, ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய மேம்பாலம் என்பதால், சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில அமைச்சர்கள், அதிகாரி கள், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், டார்ஜிலிங் சென்றுள்ள, முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளதால், கோல்கட்டா திரும்ப முடியாமல் போனதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X