'விமானத்தில் கோஷமிடுவதை ஏற்க முடியாது' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'விமானத்தில் கோஷமிடுவதை
ஏற்க முடியாது'

சென்னை : ''விமானத்தின் உள்ளே, ஒரு தலைவரை எதிர்த்து கோஷமிடுவதை, அனுமதிக்க முடியாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

விமானத்தில்,கோஷமிடுவதை,ஏற்க முடியாது,தமிழிசை,மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்


அவர் நேற்று அளித்த பேட்டி: பா.ஜ., தலைவர் தமிழிசை பயணம் செய்த விமானத்தில், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய சோபியா, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். விமான நிலையம், பொது இடம். அங்கு கோஷமிடுவதையோ, ஜனநாயகத்திற்கு முரணாக நடப்பதையோ ஏற்க முடியாது.

இதை அனுமதித்தால், எந்த தலைவர்களும், இனி, ரயில் நிலையம் போக முடியாது; விமான நிலையம் போக முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில், போராட்டம் நடத்தலாம். விளம்பரத்திற்காக, வேண்டுமென்றே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, வேதனைக்கு உரியது.

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, விமானத்தின் உள்ளே கோஷமிடுவதை, அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

சட்டப்படி தவறு: தமிழிசை


''சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், எந்த விதத்திலும், நான் சட்டத்தை மீறவில்லை. சட்ட விதிகளின்படி, விமானத்திற்குள் கோஷமிடுவது தவறு,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

விமானத்தில்,கோஷமிடுவதை,ஏற்க முடியாது,தமிழிசை,மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்


சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: துாத்துக்குடிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், இருக்கை எண், ௩ல் பயணித்தேன். அதே விமானத்தில், இருக்கை எண், ௮ல், சோபியா பயணித்தார். விமானத்திற்கு உள்ளேயே, 'பா.ஜ.,வின் பாசிச ஆட்சி ஒழிக'

Advertisement

என்று, என்னை நோக்கி, கைகளை உயர்த்தி, அவர் சத்தம் போட்டார்.

விமான முனையத்திற்கு உள்ளேயும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். நான் அமைதியாக இருந்த நிலையிலும், அவர் நடந்து கொண்ட விதம், சரியாக இல்லை. இங்குள்ள, அரசியல் தலைவர்களுக்கு எதிராக, விமானத்திற்குள் கோஷமிட்டால், அவர்கள் சும்மா இருந்து விடுவரா? நான், எந்த விதத்திலும் சட்டத்தை மீறவில்லை. இரண்டு, மாற்றுக் கருத்துடைய தலைவர்கள், விமானத்தில் பயணிக்கலாம்; சண்டையிடலாமா?

ஸ்டாலின், ஒரு அரசியல் கட்சியின் தலைவர். மெட்ரோ ரயிலில், தன்னை சந்திக்க வந்தவரை அறைந்தவர். அப்போது, கருத்துச் சுதந்திரம் எங்கே போனது? எனக்கு எதிராகவும், நான் சார்ந்த கட்சிக்கு எதிராகவும், விமானத்திற்குள், சோபியா கோஷம் போட்டுள்ளார். சட்ட விதிகளின்படி, விமானத்திற்குள் கோஷமிடுவது தவறு. இவ்வாறு தமிழிசை கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (88+ 429)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
05-செப்-201819:39:03 IST Report Abuse

N.Purushothamanஇது முழுக்க முழுக்க திட்டமிட்டே செய்யப்பட்ட ஒன்று ..நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மாஜிஸ்திரேட் அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு 16 வக்கீல்கள் ஆஜராகி உள்ளனர் ..இவரின் தந்தையோ நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்கிற ரீதியில் புகார் கொடுத்து உள்ளார் ...எல்லாவற்றிக்கும் மேலாக இந்த அம்மணி முடிந்து போன கடவுசீட்டை கொடுத்துள்ளதை காவல்துறை தற்போது கண்டுபிடித்து வரும் 8 ஆம் தேதிக்குள் தற்போதைய கடவுசீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது ...இதெல்லாம் எதுவும் தெரியாமல் தமிழிசையை எதிர்க்கிற திராவிடால்ஸை என்னன்னு சொல்றது ?

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-செப்-201818:15:57 IST Report Abuse

Malick Raja. பொது மக்களே எஜமானர்கள் என ஒட்டு வாங்கும்போது சொல்வது யார் ? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்பவர்கள் யார் ? தேர்தலின்போது வீடு வீடாக ஏறிஇறங்கி பிச்சைக்காரர்களை விட கேவலமாக கும்பிட்டு கால்களில் விழுந்து ஒட்டு கேட்டு அலைந்தவர்கள் யார் ? திருமதி .தமிழிசை அவர்களிடம் கட்சி காரர் அல்லது எந்த கட்சியின் உறுப்பினராவது இப்படி செய்திருந்தால் நடவடிக்கைக்கு உரிய ஒன்றே ... ஆனால் அப்பெண்மணி ஒரு மாணவி பொது மக்களில் ஒருவராக தனியாக கோஷம் போட்டது எப்படி தவறாகும் .. எந்த சட்டத்தில் இருக்கிறது தண்டனைக்குரிய குற்றம் என்று . யாராவது சொல்லமுடியுமா ? எனவே பொதுமக்களாக கட்சிசாராமல் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் அரசியல் வாதிகளை பிடித்து வாதிடலாம் அதை ஏற்கமுடியாதவர்கள் ஜனநாயக அரசியலை மாற்றி அமைக்கவே முடியாது என்பதால் அரசியலை விட்டு வெளியேறுவதே நன்று .. வாழ்க ஜனநாயகம் .. வீழ்க முடியாட்சி தத்துவம்

Rate this:
Raskoolu - Madurai,இந்தியா
05-செப்-201817:50:53 IST Report Abuse

RaskooluVictor Christopher, சாரி டு செ திஸ். நாங்க மன்னிச்சுட்டே இருக்கோம். நீங்க ஏறி மிதிச்சுட்டே இருக்கலாம்.

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X