அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு

Updated : செப் 05, 2018 | Added : செப் 05, 2018 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு மாலை 6.30 மணிக்கு நிறைவு பெற்றது. குட்கா முறைகேடு தொடர்பாக காலை 8 மணிக்கு துவங்கிய ரெய்டு சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மேலும் குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகம் உட்பட 35 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.


விஜயபாஸ்கர் அறிக்கை:

இந்நிலையில் இன்று நடந்த சிபிஐ ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


மடியில் கனமில்லை:

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன். ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுப்பியதால் அவர் குற்றவாளியாகிவிட முடியாது. குட்கா வழக்கில் தொடர்புடைய மாதவராவை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்தித்தது இல்லை. என் மீது குற்றம் சுமத்தி அரசியல் வாழ்வை அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். அது முடியாது. தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை; எனவே வழியில் பயமில்லை.


முழு ஒத்துழைப்பு:

பிரச்னைகள் அரசியல் வாழ்வில் ஏற்படும் போதெல்லாம் அதனை கடந்து வெற்றி பெற்று வருகிறேன். இந்த பிரச்னையையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெளிவருவேன். சிபிஐ நடத்திய சோதனைக்கு என் முழு ஒத்துழைப்பை வழங்கினேன். சட்டப்படி நடக்கும் குடிமகனாக எந்த விசாரணைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




குடோனிற்கு சீல்


குட்கா ஊழல் தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புதுறையிடம் இருந்து சமீபத்தில் சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது. சிபிஐ வசம் வந்த பிறகு இவ்வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் குட்கா குடோன்கள் பலவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாதவராவ் குட்கா குடோனிலும் கடந்த வாரம் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர்.


ரெய்டு

இதன் அடுத்த கட்டமாக இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.


விழுப்புரம், தூத்துக்குடியில்


விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா ஊழல் தொடர்பாக தூத்துக்குடி, ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். குட்கா ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக காவல் துறை அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


அதிகாரிகள் வீட்டில்


குட்கா விவகாரம் தொடர்பாக, உதவி ஆணையர் மன்னர்மன்னன், டிஎஸ்பி சங்கர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி, நாராயணன், சிவக்குமார் வீடுகளிலும், கலால்வரித்துறை அதிகாரிகள் குல்சார்பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்திரி வீடுகளிலும், விற்பனை வரி கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், ஆணையர் குறிஞ்சி செல்வம், விற்பனை வரி துணை கண்காணிப்பாளர் கணேசன் வீடுகளிலும் சோதனை நடந்தது.ஜெயம் நிறுவன இயக்குநர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, ஸ்ரீநிவாச ராவ் ஆகியோரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.




தமிழகத்திற்கு தலைகுனிவு


அமைச்சர், டிஜிபி வீடுகளில் நடக்கும் சிபிஐ ரெய்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ரெய்டு தமிழகத்திற்கு தலைகுனிவு. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவியில் நீடிப்பது மக்களாட்சிக்கு இழுக்காகிவிடும். இருவரும் முன்வந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.சட்ட அமைப்புகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால், அவர்களை வரலாறு மன்னிக்காது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-செப்-201800:27:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரெயிடு செய்யிறவனுக்கும் வெட்கமில்லை. ரெயிடு ஆனவனுக்கும் வெட்கமில்லை..
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-செப்-201820:49:20 IST Report Abuse
GB.ரிஸ்வான் திருட்டுப்பயல் சாராயமூஞ்சி
Rate this:
Share this comment
Cancel
Annamalai Nagappa - CHENNAI,இந்தியா
05-செப்-201820:45:59 IST Report Abuse
Annamalai Nagappa இனிமேல் இந்த மாதிரி செய்திகளை எல்லாம் தனியாக பார்டர் போட்டு " இன்றைய தமாஷ் " என்று நீங்கள் பிரசுரம் செய்யலாம். தினம் தினம் மத்திய சர்க்கார், மாநில சர்க்கார் , வருமா இனிமேல் நீங்கள் தனியா பார்டர் போட்டு முதல் பக்கத்தில் " இன்றைய தமாஷ் " என்னும் பெயரில் இந்த மாதிரி செய்திகளை போடலாம். இந்தியாவின் அரசியல் சீரழிந்து போவதை இப்படி வள்ளுவர் சொன்னபடி இடுக்கண் வருங்கால நகுக என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான். இளைய தலைமுறை தான் இதை சீர் செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X