பேரணிக்கு எந்த நோக்கமுமில்லை: அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேரணிக்கு எந்த நோக்கமுமில்லை: அழகிரி

Updated : செப் 05, 2018 | Added : செப் 05, 2018 | கருத்துகள் (58+ 29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சென்னையில் நடந்த பேரணிக்கு எந்த காரணமும் இல்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே நடந்தது என அழகிரி கூறினார்.


பேரணி

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார். திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேசன் அருகே துவங்கிய இந்த பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு பங்கேற்றனர். பேரணி காரணமாக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.

அமைதி பேரணியில் என்னோடு வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்களையும் திமுகவில் இருந்து நீக்க முடியுமா? என்று ஸ்டாலினுக்கு சவால் விட்டார் அழகிரி. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் அமைதி பேரணி நடத்தினார் அவரது மூத்த மகன் அழகிரி. மகன், மகள் ஆகியோருடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியபின் அழகிரி சந்தோசம் பொங்க பேட்டி அளித்தார். ஏர்போர்ட்டில் என்னை வரவேற்றார் என்பதற்காக வேளச்சேரி திமுக நிர்வாகி ரவியை அவசரமாக திமுகவில் இருந்து நீக்கி இருக்கிறார் அவர். இப்போது என்னோடு ஒன்றரை லட்சம் பேர் வந்தார்களே, இத்தனை தொண்டர்களையும் நீக்க முடியுமா? என்று பெயரை சொல்லாமல் தம்பி ஸ்டாலினுக்கு சவால் விட்டார் அண்ணன் அழகிரி. பேரணியில் 20,000 பேர் பங்கேற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஐநூறு முதல் ஆயிரம் பேர் இருக்கலாம் என அறிவாலயம் வட்டாரங்கள் மதிப்பிட்டன.

பேரணியாக சென்ற அழகிரி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன் , மகள் ஆதரவாளர்கள் பலரும் சென்றனர்.




அஞ்சலி செலுத்த வந்தோம்

பின்னர் அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், 30வது நாள் நினைவு நாள் முன்னிட்டு நடந்த அமைதி பேரணியில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பேரணியில் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா. பேரணிக்கு எந்த காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-செப்-201801:19:49 IST Report Abuse
Mani . V அடிமை ஆளும் கட்சி பின்னணியில் இருந்து இயக்கியதால் "நோக்கம் இல்லாத" பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது. மக்கள் வாழ்வாதாரத்துக்காக போராடினால், பேரணி சென்றால் அனுமதி அளிக்காத அரசு, வன்முறையை (துப்பாக்கி சூடு, வாகனங்களுக்கு, வீடுகளுக்கு தீ வைத்தல்) கட்டவிழ்த்து விடுகிறது. அண்ணன் - தம்பிக்குள் நடக்கும் சொத்து தகராறு (திமுக அறக்கட்டளையின் பல லட்சம் கோடிகளை பங்கு போடுவது தொடர்பாக) தொடர்பாக பேரணி நடத்துவதற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது?
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
05-செப்-201820:52:38 IST Report Abuse
rajan.  எத்தின தபா ஆளாளுக்கு போயி அந்த சமாதி போராளிக்கு வணக்கம் செலுத்துவீங்கப்பா. பாவம் அவர் மறுபடியும் எழுந்து வந்துட போறார்ப்பா. தாங்காது அறிவாலயம்.
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
05-செப்-201820:17:45 IST Report Abuse
anbu பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு அல்லாமல் வேறொன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X