கடும் சரிவில் ரூபாய் மதிப்பு : 72 ஐ கடந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடும் சரிவில் ரூபாய் மதிப்பு : 72 ஐ கடந்தது

Added : செப் 05, 2018 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு, இந்திய பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அன்னிய செலாவணி சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, பங்குச்சந்தைகள் சரிவு, 
Indian rupee value, Indian stock market, crude oil prices, international foreign exchange market, Indian rupee depreciation, stock markets declines,

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (செப்.,5, காலை 9.15 மணி நிலவரம்) ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து 71.38 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 71.58 ஆக இருந்தது. ஆனால் 11 மணியளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிய துவங்கியது. இதுன் விளைவாக 21 காசுகள் சரிந்து 71.79 என்ற நிலையை எட்டியது.

பின்னர் 11.20 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் சரிந்து 72.06 என்ற நிலையை எட்டியது. இதனால் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் 11.40 மணியளவில் ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்ந்து 71.75 ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-செப்-201814:56:19 IST Report Abuse
இந்தியன் kumar காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்தால் ருபாய் மதிப்பு 100 ஆகி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
06-செப்-201805:24:12 IST Report Abuse
அரசு மோடிஜி, விட்ராதீங்க நம்ம எப்படியாவது டாலரின் இந்திய மதிப்ப 100 ரூபாய்க்கு கொண்டு வரணும். அதுக்கப்புறம் இந்த பெட்ரோல் இருக்கு பாருங்க, அதையும் 100 ரூபாய் கொடுங்க. அப்பதான் நாம வளர்ச்சியடைந்து இருக்குன்னு சொல்ல முடியும். நீங்க சிறப்பாக ஆட்சி நடத்துவதற்கு இந்த ஒரு குறியீடு பிரமாதமான சான்று. இந்த கிறுக்கு பிடிச்ச பசங்க இந்த விஷயத்தையே பேசிகிட்டு இருக்காங்க.. வேற ஏதாவது ஒரு டாபிக்க டிரெண்டிங்கில் விடுங்க ஜி.. அப்பத்தான் இத மறப்பாங்க. ஒருவேளை சோபியா விஷயம் அதனாலதான் நேஷனல் டிரெண்டிங்கில் போச்சோ ? செம்ம ஜி செம ஜி
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-செப்-201801:13:24 IST Report Abuse
Mani . V ஹையா ஜாலி, ஜாலி. வெகு விரைவில் 100 ஐ தொட்டு விடுவோம். ("என்னாது, இது வளர்ச்சி இல்லையா? நான் கூட இது இமாலய வளர்ச்சியாக்கும் என்று நினைத்து விட்டேன்). இந்த மாத சம்பளத்தில் எப்படியும் "திருவோடு" வாங்கி விட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X