அடர்ந்த காடு, நதியை கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள் | Dinamalar

அடர்ந்த காடு, நதியை கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

Updated : செப் 06, 2018 | Added : செப் 05, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அடர்ந்த காடு,நதியை கடந்து,பள்ளி செல்லும்,மாணவர்கள்

ஹர்தா: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர், தினமும், அடர்ந்த காடு மற்றும் நதியை கடந்து, பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மத்திய பிரதேசத்தில், ஹர்தா மாவட்டம், மேஹ்காம் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியர், 7 கி.மீ., தொலைவில், போரி என்ற ஊரில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்கின்றனர்.

தினமும் காலையில், வீட்டில் இருந்து புறப்படும் மாணவர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, முதலில் ஆபத்தான காட்டுப் பகுதியை கடந்து, அதன் பின், அப்பகுதியில் ஓடும் கஞ்சல் நதியில் இறங்கி நடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது: காடு மற்றும் நதியை கடந்து செல்வது, மாணவர்களுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. கிராமத்திற்கு முறையான சாலை வசதி மற்றும் நதியில் பாலம் கட்டக் கோரி, பல முறை அரசுக்கு கடிதம் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
06-செப்-201822:39:13 IST Report Abuse
Arasu சிவராஜ் சிங்க் சௌகான் waste ...இந்த ஆள் மேல ஏக பட்ட புகார்....
Rate this:
Share this comment
Cancel
06-செப்-201807:12:06 IST Report Abuse
ருத்ரா அரசியல்வாதியின் பிள்ளைகள் படித்தால் நடவடிக்கை எடுத்திருப்பர். எதற்கும் கொஞ்சம் பொறுங்க. தேர்தல் வருகிறது. நிலை மாறலாம்.கல்வி நாட்டின் வளர்ச்சி அமைச்சர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X