தேவிபட்டினம் நவபாஷாண கோயில் அலுவலகத்தில் பூட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவிபட்டினம் நவபாஷாண கோயில் அலுவலகத்தில் பூட்டு

Added : செப் 05, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தேவிபட்டினம்:ராமநாதபுரம் அருகே நவபாஷாண தீர்த்தத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டு அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
தேவிபட்டினத்தில் கடல் பகுதியில் நவபாஷாண தீர்த்த கோயில் உள்ளது. புண்ணிய தலமான இந்தப்பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பக்தர்களை காண்காணிக்கவும், நிர்ணயித்த கட்டண சீட்டு வழங்க அலுவலகம்உள்ளது.

கட்டுப்பாட்டு அறை

கடல் பகுதியில் உள்ள நவபாஷாண பகுதியில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளது. இங்கு பக்தர்கள் தோஷ பரிகார நிவர்த்திக்காக வருகை தருகின்றனர். இந்த பரிகார பூஜைக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அர்ச்சகர்கள் உள்ளனர். கட்டண சீட்டுப்படி பரிகார பூஜை சேவைகளை வழங்க வேண்டும். தீர்த்தப்பகுதிக்கு வருகை தரும் பக்தர்கள் கண்காணிப்பு செய்யப்படுவார்கள். இதற்கான கட்டுப்பாட்டு அறை பூட்டு போடப்பட்டு பூட்டியுள்ளனர்.

பகல் நேரத்தில் பணியில் இருக்க வேண்டிய இந்த சமய அறநிலையத்துறை பணியாளரும், அர்ச்சகரும் இல்லாததால் கட்டுப்பாட்டு அறை பூட்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை தேவை

முக்கிய புனித தலமான நவபாஷாண தீர்த்தத்தில் பக்தர்கள் வருகை தரும் போது சம்பந்தப்பட்ட அலுவலகம் பூட்டிக்கிடப்பதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இது போன்ற இடங்களில் பக்தர்கள் வரும் நேரங்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்து கட்டண சீட்டுகள் வழங்கி மக்களுக்கு பரிகார பூஜை சேவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X