திருநா - இளங்கோவன் மோதல் வலுக்கிறது : இரு கோஷ்டிகளும் டில்லியில் புகார் பட்டியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநா - இளங்கோவன் மோதல் வலுக்கிறது : இரு கோஷ்டிகளும் டில்லியில் புகார் பட்டியல்

Added : செப் 06, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
திருநா - இளங்கோவன் மோதல் வலுக்கிறது  : இரு கோஷ்டிகளும் டில்லியில் புகார் பட்டியல்

சென்னையில் உள்ள, காங்கிரஸ் தலைமையகமான, சத்தியமூர்த்தி பவனில், நேற்று முன்தினம் நடந்த, அடிதடி பற்றி, டில்லி மேலிடத்தில் புகார் தெரிவிக்க, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் நேற்று டில்லி சென்றார்.திருநாவுக்கரசர் மீது புகார் தெரிவிக்க, இளங்கோவன் கோஷ்டியினரும், டில்லி செல்ல முடிவு செய்துள்ளதால், தமிழக, காங்., கட்சியில், மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
மாநில, காங்., முன்னாள் தலைவரான இளங்கோவன், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'திருநாவுக்கரசர், பா.ஜ.,வில் சேர்ந்தால், அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்' என, கிண்டல் அடித்திருந்தார். அதற்கு பதிலடியாக, திருநாவுக்கரசர், 'அவரது எதிர்காலத்தை, முதலில் பார்க்கச் சொல்லுங்கள்' என்றார்.இந்நிலையில், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, இளங்கோவன், பொருளாளர், 'நாசே' ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர், ரங்கபாஷ்யம் ஆகியோர், அறிவாலயம் சென்றனர்.
கண்டிக்கவில்லை : அப்போது, ஸ்டாலினிடம், 'கருணாநிதி மறைவு தொடர்பாக, டில்லியில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதை, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை விமர்சித்ததை, திருநாவுக்கரசர் கண்டிக்கவில்லை' என, இளங்கோவன், 'போட்டு' கொடுத்துள்ளார். உடனே, ஸ்டாலின், 'அதற்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே' என கூறவும், அங்கிருந்த, தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் சிரித்துள்ளனர். இந்த தகவல், திருநாவுக்கரசருக்கு தெரிய வந்ததும், அவர் கோபம் அடைந்தார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ஸ்டாலின் முதல்வர் கனவு குறித்து விமர்சித்துள்ளார். இதுவும், இளங்கோவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுபோல, திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த அடிதடி, ரகளை தொடர்பாக, இளங்கோவன் ஆதரவாளர்களான, ஏ.வி.எம்.ஷெரீப் உட்பட, ஏழு பேரை, கட்சியில் இருந்து, திருநாவுக்கரசர் நீக்கி உத்தரவிட்டார்.இதனால், திருநாவுக்கரசர் - இளங்கோவன் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.அதோடு, இளங்கோவன்மீது புகார் செய்ய, திருநாவுக்கரசர் நேற்று டில்லி சென்றார். அங்கு, காங்கிரஸ் பொருளாளர், அகமது படேல் மற்றும் மேலிட தலைவர்கள் சிலரை சந்தித்து, இளங்கோவன் மீது புகார் கூற திட்டமிட்டுள்ளார்.
கூட்டம் ரத்து : இதனால், சத்தியமூர்த்தி பவனில், மேலிட பொறுப்பாளர், சஞ்சய் தத் தலைமையில், இன்று நடக்க இருந்த கூட்டம், ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில், நேற்று அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில், நீக்கப்பட்ட ஏழு பேருடன், டில்லி சென்று, திருநாவுக்கரசர் மீது புகார் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு : கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, ஏழு பேர், நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'எந்த விளக்கமும் கேட்காமல், திருநாவுக்கரசர் நீக்கியுள்ளார். இது பற்றி, மேலிட தலைவர்கள் ராகுல், முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், சின்னா ரெட்டி ஆகியோருக்கு, புகார் அனுப்பியுள்ளோம். எங்களை நீக்கியது செல்லாது; தொடர்ந்து, காங்கிரசில் செயல்படுவோம்' என, கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
06-செப்-201817:56:34 IST Report Abuse
murali பெருந்தலைவர் காமராஜர் தன குரு சத்யமூர்த்தியிடம் அரசியில் பயின்றார். கக்கன் அவர்கள் மதுரை வைத்யநாதரிடம் அரசியில் பையேற்றர். அதனால் கடைசிவரை நேர்மையா வாழ்ந்துவிட்டு சென்றார்கள். ஆனால் திருநாவுக்கரசர் பல கட்சி தாவி காங்கிரஸில் ஐக்கியம் ஆனவர். EVKS இளங்கோவன் நகல் பேச்சு நரகள் பேச்சு வேஷ்டி கிசித்தல் போன்ற கலைகளில் சிறந்தவர்.தமிழக காங்கிரஸ் நன்றாக உறுப்பிடும்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
06-செப்-201817:39:44 IST Report Abuse
வல்வில்  ஓரி இப்டியே டெல்லியில போயி மாத்தி மாத்தி வத்தி வெச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? சத்தியமூர்த்தி பவன் கலாசாரம் இதுவா..?.....புது வெட்டி ...சட்டை எல்லாம் ஆளுக்கு நாலு அஞ்சி வாங்கிட்டு போயி ..அடிச்சி காட்டுங்க...அப்ப தானே தெரியும் யாரு பெரியவன் ன்னு? ...
Rate this:
Share this comment
Cancel
Hariharan Iyer - Nagpur,இந்தியா
06-செப்-201817:02:17 IST Report Abuse
Hariharan Iyer இந்த கொசுத் தொல்லை தங்க முடியலைப்பா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X