ரஜினி கட்சியில் குஷ்பு ஐக்கியம்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி கட்சியில் குஷ்பு ஐக்கியம்?

சென்னை : 'நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தால், கொள்கை பரப்பு செயலராக சேர்வேன்' என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதை ரஜினி ரசிகர்கள் மேற்கோள் காட்டி குஷ்புவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு குஷ்பு, வணக்கத்தை மட்டுமே பதிலாக தந்துள்ளார்.

Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,kushboo,குஷ்பு


ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: குஷ்பு இதுவரை இரண்டு கட்சி மாறி விட்டார். குஷ்பு மட்டுமல்ல சினிமாவை சேர்ந்த நிறைய பேர், ரஜினி, கட்சி ஆரம்பித்தால் வந்து சேருவர். இதுவரை ரஜினி குறித்து தவறாக எந்த கருத்தையும் குஷ்பு கூறவில்லை. குஷ்பு, ரஜினி கட்சியில் சேர்வதற்கு தயாராக

இருந்தாலும் ரஜினி சேர்த்துக் கொள்வாரா என்பது, அவருக்கே வெளிச்சம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேனர், போஸ்டர்: ரஜினி நிபந்தனை


'பேனர், போஸ்டர்' வைக்க, நடிகர் ரஜினி, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

விரைவில், அரசியல் கட்சி துவங்க உள்ள, நடிகர் ரஜினி, 'மக்கள் மன்றம்' என்ற அமைப்பை, நடத்தி வருகிறார். அதற்கு, மாநகர, மாவட்ட மற்றும் மண்டல அளவில் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதன் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாக நடைமுறைகளில், புதுப்புது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

சமீபத்தில், ஜாதி அமைப்பில் உள்ளவர்களுக்கு, தன் அமைப்பில் இடம் இல்லை என, அறிவித்த ரஜினி, தற்போது, பேனர், போஸ்டர் வைக்க, நிபந்தனைகள் விதித்துள்ளார். போஸ்டர், பேனர் வடிவமைப்புகள், எப்படி இருக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement



ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் மன்ற நிர்வாகிகள், பேனர், போஸ்டர் வைக்க வேண்டும் என்றால், அவற்றை, தலைமை மன்றத்துக்கு அனுப்பி, அனுமதி எண் பெற்ற பிறகே, வைக்க வேண்டும். மாவட்டம், மாநகரம் சார்ந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட, மாநகர நிர்வாகிகளின் படம் இடம் பெறலாம்.

மாநகரத்திற்கு உட்பட்ட நிகழ்ச்சிகளில், மண்டல நிர்வாகிகளின் படம், மாவட்ட, மாநகர நிர்வாகிகளின் படத்தை விட, சிறியதாகவே இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (68+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
12-செப்-201809:08:59 IST Report Abuse

Shanmuganathamuthaliar Sasikaramuthaliarஒவ்வொரு கட்சிகளையும் இருந்து பார்ப்பதே இந்த நடிகையின் தொழிலாக உள்ளது. சோனியாவும் - ராகுலும் இவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லையோ? ஆகவே, தனது இனத்தின் கட்சியில் சேர்ந்து அவர்களுக்கும் -நாட்டுக்கும் நல்லது செய்தால் நீடூழி வாழமுடியும் என்பது எனது திண்ணம்.

Rate this:
Ray - Chennai,இந்தியா
12-செப்-201807:55:09 IST Report Abuse

Rayரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்னு உறுதியா நம்புறாங்களோ?

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-201806:02:55 IST Report Abuse

meenakshisundaramஏன்? கமல் உங்களை ஈர்க்கவில்லையா? ரஜினி கட்சி ஆரம்பிக்க சில பல வருஷங்கள் ஆகலாம் ,அதுவரை கமல் கட்சியிலே இருந்துட்டு அப்புறம் மாறிக்கலாமே ?

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X