தெலுங்கானாவை பின்பற்ற தமிழக வேளாண் துறை திட்டம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தெலுங்கானாவை பின்பற்ற
தமிழக வேளாண் துறை திட்டம்

நிலத்தடி நீர் பாசனத்துக்கு, 'சோலார் பம்ப் மோட்டார்' பயன்படுத்தும் முறையை கொண்டு வர, தமிழக வேளாண் துறை திட்டம் வகுத்துள்ளது.

தெலுங்கானா,பின்பற்ற,தமிழக,வேளாண் துறை,திட்டம்


தெலுங்கானா மாநிலத்தில், 'எங்கள் ஊர்; எங்கள் ஏரி' என்ற, திட்டத்தின் கீழ், 'நபார்டு' வங்கியிடம் கடனுதவி பெற்று, 45 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 270 டி.எம்.சி., நீரை தேக்கி வைத்து, பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரிகள் புனரமைப்பு பணிகள் நடந்த பகுதிகளில், நிலத்தடி

நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி, மூன்று போக சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு, சூரிய மின்சக்தியில் இயங்கும், சோலார் பம்ப் மோட்டார்கள், மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு, பாசன தேவைக்கான மின் சார பயன்பாடு குறைந்து உள்ளது. ஆந்திராவிலும், இதே போன்று, பாசன தேவைக்கு, சோலார் பம்ப் மோட்டார் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும், ஏரிகளை புனரமைக்கும், குடிமராமத்து திட்டம் நடக்கிறது. நாளடைவில், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, நிலத்தடி நீர் பாசனத்துக்கு, சோலார் பம்ப் மோட்டார்களை பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் இணைப்பு கேட்டு, ஏராளமான விவசாயிகள் காத்து இருக்கின்றனர். சோலார் பம்ப் மோட்டார் வழங்கும் திட்டத்தை, வேளாண் பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது.

நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தும், விவசாயிகள் அனைவரையும், சோலார் பம்ப் மோட்டார் பயன்பாட்டுக்கு மாற்றி விட்டால், மின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-செப்-201821:06:36 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நானும் சட்டசபையைத் தான் கலைச்சிட போறாங்கன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டுட்டேன்

Rate this:
Power Punch - nagarkoil,இந்தியா
06-செப்-201817:44:28 IST Report Abuse

Power Punch ஏன்..நாசா.. ராஜுவிடம் எதுவும் ஐடியா இல்லையா..என்னப்பா விஞ்ஞானி அவர்...

Rate this:
06-செப்-201816:36:02 IST Report Abuse

ஆப்புஅங்கே மணல் கொள்ளை இல்லியேடா? அங்கே ரெண்டு ஜீவநதிகள் ஓடுதேடா?

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X