தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்

Added : செப் 06, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்

சேலம்: அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில், தலைமையாசிரியை காலில் விழுந்து கலெக்டர் வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் ரோகிணி, ஆசிரியர்கள், மாணவியருடன் சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ரோகிணி, தலைமையாசிரியை தமிழ்வாணியின் காலில் விழுந்து வணங்கினார்.
பின் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:இன்று, நான் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள்தான். மாணவியரான நீங்கள், நாளை மேடைக்கு வர காரணமாக இருப்பதும் அவர்களே. அதனால் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெற மட்டுமல்ல, நல்ல பழக்க வழங்கங்களை கற்றுக்கொள்ளவும் ஆசிரியர்கள் உதவுகின்றனர். அவர்களின் அறிவுரையை கேட்டு, சிறந்த முறையில் கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.நான், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு பள்ளியில்தான் படித்தேன். தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி உயர் லட்சியத்துடன் தயாராவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாரிமுத்து.க - சென்னை,இந்தியா
12-செப்-201812:57:29 IST Report Abuse
மாரிமுத்து.க  என்னடா இந்த கலெக்டர் அம்மா கொஞ்ச நாலா நியூஸ்ல வரலேன்னு பார்த்தேன்... இந்தா வந்துட்டாங்கல்ல...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-செப்-201820:07:12 IST Report Abuse
கல்யாணராமன் சு.இந்த மாதிரி நீயூஸ்க்கு வரத்து பரவாயில்லீங்க...
Rate this:
Share this comment
Cancel
மாரிமுத்து.க - சென்னை,இந்தியா
12-செப்-201812:49:23 IST Report Abuse
மாரிமுத்து.க  என்னடா இந்த கலெக்டர் அம்மா கொஞ்ச நாலா நியூஸ்ல வரலன்னு பார்த்தேன்... இந்த வந்துட்டாங்கல்ல...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-செப்-201812:40:18 IST Report Abuse
சீனி ஒரு நல்ல பெண், ஒரு நல்ல அதிகாரி, ஒரு நல்ல குடிமகள், ஒரு மரியாதையான பெண். எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து, தமிழ் கற்று , கலெக்டருக்கு உரித்தான் கெட்டப்பில் என்ன ஒரு தன்னம்பிக்கியோட பேட்டி கொடுக்குது இந்த பாரதி கண்ட புதுமைப்பெண், இவர மாதிரி நம் ஊர் பெண்கள் ஒரு அதிகாரியாகி வேலைக்கு வர முயற்சி செய்யவேண்டும். இப்போதைக்கு தற்கொலை செய்துகொண்டது, விமானத்தில் சண்டைபோட்டது தான் நமக்கு எதோ பெரிய சதனையாளரா அரசியல்வாதிகள் காட்டுவது மிக துரஷ்டவசமாது. நல்லவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் பெண்களே, அவர்கள் தான் உன் ரோல் மாடல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X