கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்கியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்கியது

Added : செப் 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் கிடப்பில் போடப்பட்ட கிள்ளை கீழச்சாவடி - ராதா விளாகம் சாலையில் வடிகால் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி துவங்கியது.கிள்ளையில் இருந்து கீழச்சாவடி, ராதா விளாகம், உத்தமசோழமங்கலம், கோவில்பள்ளம் மற்றும் நக்கரவந்தன்குடி வழியாக சிதம்பரத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த சாலை பழுதடைந்ததை சீரமைக்காமல் விட்டதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி சிதம்பரத்தில் இருந்து வந்த அரசு பஸ் தடம் எண்.15-ஏ ராதாவிளாகத்துடன் திருப்பப்பட்டது. இதனால் உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இன்றும் பஸ் போக்குவரத்தின்றி அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், ராதாவிளாகம் - கீழச்சாவடி சாலையில், கடந்த ஜூன் மாதம் கீழச்சாவடி வடிகால் வாய்க்காலில் பழுதடைந்த பாலத்தை அப்புறபடுத்தி விட்டு புதிய பாலம் கட்டவும், சரிவாக உள்ள பகுதியில் தடுப்பணை கட்டவும் பணி துவங்கியது.ஆனால், அப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கிள்ளைக்கு வந்து செல்ல கடும் அவதிடைந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் தற்போது பாலம் கட்டும் பணி துவங்கியது. பருவமழை துவங்குவதற்குள் பணிகளை விரைந்து தரமாக முடித்து சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X