வர்ஜின் ராக்கெட்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வர்ஜின் ராக்கெட்

Added : செப் 06, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வர்ஜின் ராக்கெட்

ராக்கெட்டை ஏவுவதில் உள்ள பெரிய செலவு, அதற்கான எரிபொருள் தான். அடுத்து, ராக்கெட்டை தயாரிக்க ஆகும் செலவு. இந்த இரண்டையும் குறைக்க, 'வர்ஜின் ஆர்பிட்' ஒரு புதிய வழியை உருவாக்கி இருக்கிறது.
ஒரு, 'போயிங் - 747' விமானத்தின் இறக்கையில், 'லாஞ்சர் ஒன்' ராக்கெட்டை வைத்து இணைப்பது. அதை சுமந்து கொண்டு தரையிலிருந்து, 35 ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்து சென்று, ராக்கெட்டை கழற்றி விடுவது.
இரண்டு எரிபொருள் பகுதிகளைக் கொண்ட லாஞ்சர் ஒன், உடனே தீயைக் கக்கியபடி விண்வெளியை நோக்கி சீறிப் பாய்ந்து, சிறிய செயற்கைக் கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் வேலையைச் செய்யும்.
தரையிலிருந்து, புவியீர்ப்பு குறைந்த விண்வெளிக்குப் போகும் சில நிமிட பயணத்திற்கு ஆகும் பல கோடி ரூபாய் செலவைக் குறைக்க, இந்த உத்தி உதவும் என்று நம்புகிறது வர்ஜின் ஆர்பிட்.
ராக்கெட்டை கழற்றிவிட்டு தரையிறங்கும் போயிங் விமானத்தை, மீண்டும் அடுத்த ராக்கெட்டை ஏவுவதற்கு பயன்படுத்தலாம்.
போயிங் விமானத்திற்கு, 'காஸ்மிக் கேர்ள்' என, அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. அண்மையில் இந்த முறையை, அமெரிக்காவிலுள்ள மொஜாவே பாலைவனத்தில், வர்ஜின் ஆர்பிட் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X