அச்சிடப்பட்ட மின்சார மோட்டார்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அச்சிடப்பட்ட மின்சார மோட்டார்!

Added : செப் 06, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அச்சிடப்பட்ட மின்சார மோட்டார்!

ஒரு சிறிய ட்ரோன் பறப்பதற்கு தேவையான கனமில்லாத, மிகச் சிறிய மோட்டார் கிடைக்குமா என்று தேடினார், பொறியாளரான கார்ல் புகேஜா. மத்திய தரைக்கடல் தீவான மால்டாவைச் சேர்ந்த அவர் தேடியது கிடைக்கவில்லை.
செம்புக் கம்பியில் காயில் கட்டி, பியரிங் வைத்து காந்தத்தை உருவாக்கும் போது, எவ்வளவு சிறிய மோட்டாரும் சற்று கனமாகவே இருந்தது.
கார்லுக்கு திடீரென ஒரு யோசனை... சர்க்கியூட் போர்டுகளை அச்சிடுவது போல ஏன், நாமே ஒரு சிறிய மோட்டாரை அச்சிடக் கூடாது? உடனே, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தி காயில்களை அச்சிட்டு, பியரிங்கை பொருத்தி இயக்கிப் பார்த்தார்.
பலகீனமான விசையுடன் தான் அது சுழன்றது. பல முறை முயன்ற பின், அவர் அச்சிட்ட மோட்டார், ஒரு ட்ரோனை அந்தரத்தில் பறக்கவைக்கும் அளவுக்கு விசையுள்ளதாக, வெற்றிகரமாக உருவானது.
உண்மையில் கார்ல், ட்ரோன் தயாரிப்பாளரல்ல. காப்புரிமை இல்லாத திறமூல ரோபோக்களை உருவாக்குவதில் தான் அவருக்கு நாட்டம் அதிகம். எனவே, மோட்டாரை அச்சிட்டது போல, ரோபோக்களின் கைகளையும், கால்களையும் இயக்குவதற்குத் தேவையான, 'லீனியர் ஆக்சுவேட்டர்'கள் எனப்படும் விசை முடுக்கிகளையும் இதேபோல அச்சிட முடியுமா என, கார்ல் ஆராய்ந்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
10-செப்-201805:19:53 IST Report Abuse
 nicolethomson carl bugeja ? எந்த பெயரில் தேட வேண்டும் சார்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
10-செப்-201804:45:25 IST Report Abuse
 nicolethomson சார் நீங்க ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தையை திருமூல என்று எழுதியுள்ளீர்களா? ஊருடன் ஒத்து வாழ் என்று அதற்கான ஆங்கில பெயரையும் கூறியிருந்தா தேடுவதற்கு சுலபமாக இருக்கும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X