பதவியா பெரிசு: பாடம் கற்று தந்த கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதவியா பெரிசு: பாடம் கற்று தந்த கலெக்டர்

Added : செப் 06, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா, வெள்ள பாதிப்பு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கலெக்டர், நிவாரண பணி

திருவனந்தபுரம்: கேரளாவில், தான் யார் என்று கூறாமல், யாருக்கும் தெரியாமல் 10 நாட்களுக்கு நிவாரண பணிகளை செய்த கலெக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.



கேரளாவில் பிறந்தவர்

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே இருக்கும் சிறிய யூனியன் பிரதேசம் தாத்ரா மற்றும் நகார் ஹவேலி. இங்குள்ள சில்வாசா என்ற மாவட்டத்தின் கலெக்டர் கண்ணன் கோபிநாதன். கேரளாவில் பிறந்தவர். இவர், ஆக., 26ம் தேதி தான் பணியாற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அளித்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தார்.

அதன் பிறகு தனது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புத்தபள்ளிக்கு செல்வில்லை. அதற்கு பதில் அரசு பஸ்சில் பயணித்து, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பத்தினம் திட்டா பகுதிக்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாமுக்கு சென்ற கண்ணன், தான் ஒரு கலெக்டர் என்பதை யாரிடமும் கூறவில்லை. அங்கிருந்தவர்கள் கண்ணனிடம், 'பையை ஓரமாக வைத்து விட்டு நிவாரண பணிகளில் ஈடுபடுங்கள்' என, அதட்டலாக கூறினர். நிவாரண பணியில் தன்னையும் இணைத்து கொண்டார். லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கினார். பிற மீட்பு பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிரமாக கள பணியாற்றினார்.


அடையாளம் தெரிந்தது எப்படி?

அவர் கலெக்டராக பணியாற்றும் இடத்தில் இருந்து கிளம்பும் போதே விடுமுறைக்கான கடிதத்தை அளித்து விட்டு தான் வந்து இருந்தார். எனவே, அவர்களும் இவரை தேடவில்லை. நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருந்த சிலர், கண்ணனை சில நேரம் கடுமையாக பேசியுள்ளனர். அப்போது கூட அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.

எனினும், கொச்சியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற போது அவரை சிலர் அடையாளம் கண்டு கொண்டனர். எனினும் ஒன்றும் சொல்லவில்லை. இறுதியாக எர்ணாகுளத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற போது, எர்ணாகுளம் மாவட்ட கலெக்ர் முகமது ஒய் சபிருல்லா, கண்ணனை அடையாளம் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அதன் பிறகு தான் கண்ணன் ஒரு கலெக்டர் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

அதன் பிறகு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு புறப்பட்டு சென்று, வழக்கம் போல் கலெக்டர் பணிகளில் ஈடுபட தொடங்கினார். அவர் கொடுத்த விடுமுறை கடிதத்தை யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்காமல் தொடர்ந்து பணி புரிந்த நாட்களாகவே அறிவித்து விட்டது.






Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
12-செப்-201808:33:46 IST Report Abuse
Rajendran Selvaraj நம் திருவள்ளுவரின் வாக்குப்படி, உங்கள் தாய் பெருமை கொள்ளும் நேரம் சகோதரா
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
10-செப்-201804:30:58 IST Report Abuse
 nicolethomson கடுமையாக பேசிய கயவாளிகள் இப்போ செல்பி எடுக்காம போயிட்டமே என்று வருத்தப்பட்டிருப்பார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
10-செப்-201804:05:56 IST Report Abuse
Ray மெரிட் மெரிட்டுன்னு எதோ சொல்றாங்களே இதுதாங்க மெரிட் நான் பெரியவன் என்று நினைக்கும் போது நாம் சிறியவராகிப் போகிறோம்.நாம் ஒன்றுமில்லை என்றறியும் போது நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள்.ஒரு மனிதராக இருப்பதன் அழகே அதுதான்.- சத்குரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X