India, US ask Pak to act against terror emanating from its soil | பயங்கரவாதிகளை பாக்., கட்டுப்படுத்த வேண்டும்: இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளை பாக்., கட்டுப்படுத்த வேண்டும்: இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை

Updated : செப் 06, 2018 | Added : செப் 06, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
பயங்கரவாதி, பாக், இந்தியா, அமெரிக்கா, கூட்டறிக்கை,India, US, Pak, terror,

புதுடில்லி: மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


ஒப்பந்தங்கள்

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், டில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவுடனான உறவு தொடர்பாக இரு நாடுகளிடையே ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் மத்தியில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவுக்கு அதிநவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


அச்சுறுத்தல்

பின்னர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில்,என்எஸ்ஜியில் இந்தியா இடம்பெற இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கன் குறித்த டிரம்ப்பின் கொள்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பாக அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்கிறோம். பாகிஸ்தானிலிருந்து உற்பத்தியாகும் பயங்கரவாதிகளால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா கூறுகையில், அமைதி, நம்பிக்கை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான வழிகளில் ஒத்துழைப்பு வழங்க இந்த கூட்டம் உறுதி செய்தது.பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சவால்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் வாங்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வளர்ச்சிக்கான புது சகாப்தத்தில் இரு நாட்டு உறவை முன்னெடுத்து செல்வது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிப்போம். இரு நாட்டு உறவுகள் மற்றும் பகிரப்பட்ட உறவு தொடர்பாக நாங்கள் ஆக்கப்ப்பூர்வமான பேச்சு நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டறிக்கை

பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரு தரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அமைச்சர்கள் உறுதி பூண்டுள்ளனர். இந்தியா அமெரிக்காவின், முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்பதை உறுதி செய்த அமைச்சர்கள், பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-201808:09:10 IST Report Abuse
ஆப்பு ரெண்டு வாரம் முன்னாடி ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கக் கூடாதுன்னு மிரட்டல் வந்துதோல்லியோ, அதன் எதிரொலியா இந்த மீட்டிங், கூட்டறிக்கை எல்லாம். எல்லா ராணுவ சாமான்களையும் எங்க கிட்டேயே வாங்குங்க...10% தள்ளுபடி...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201807:48:57 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்த வீட்டிற்கு நாம நாட்டாமை பண்ணலாமா .... அவங்களே திருந்தினால்தான் உண்டு...புதியவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
07-செப்-201807:11:36 IST Report Abuse
Navn இந்தியா தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும். இவர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான பயங்கரவாதத்தை மூடி மறைக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X