ராஜிவ் கொலையாளிகள் விடுதலை எப்போது? கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக கோர்ட் தீர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ராஜிவ் கொலையாளிகள் விடுதலை எப்போது?
கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Court,Governor,ஆளுநர்,கவர்னர்,கோர்ட்,நீதிமன்றம்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், 26 பேருக்கு துாக்கு தண்டனை விதித்து, தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்து 1999ல் தீர்ப்பு அளித்தது.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் துாக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான, சோனியாவின் கோரிக்கையை ஏற்று, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதன்படி 2000ல் அதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பிறப்பித்தார்.

'மரண தண்டனையை குறைக்க வேண்டும்' என பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக 2014ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால் இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அனுமதி அளிக்கும்படி மத்திய அரசுக்கு 2016 மார்ச் 2ல் தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்ததாவது: முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கான தண்டனை காலத்தைக் குறைத்து அவர்களை முன்னதாகவே விடுதலை செய்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும். சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படும். அதனால் அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்பதை தமிழக அரசுக்கு தெளிவாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையில் பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை முழுமையடையவில்லை. இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்ய வேண்டும்

Advertisement

என தமிழக கவர்னருக்கு 2015 டிசம்பரில் கருணை மனு அனுப்பினேன். இரண்டு ஆண்டுகளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்குகளை இணைத்து விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கை முடித்து வைத்தது. 'பேரறிவாளன் கொடுத்துள்ள கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டும்' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேருக்கும் நேரடியாக எந்த நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் 'பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டும்' என, கூறியுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஆறு பேரும் தங்களை விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கருணை மனுவை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலை. நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்த பின் இந்த விஷயம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த முடிவு எடுக்கும்.

-ஜெயகுமார், தமிழக மீன்வளத்துறை அமைச்சர்


ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவில் உறுதியாக உள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விபரத்தை பார்த்த பின் முதல்வர் முடிவெடுப்பார்.

-சி.வி.சண்முகம், தமிழக சட்டத்துறை அமைச்சர்


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-செப்-201804:51:43 IST Report Abuse

meenakshisundaramஅப்போ Rajiv கொலைக்கு காரணமானவர்களையே விடுதலை செய்யலாம் என்று கூக்குரல் எழுந்தால் .ராஜிவ் கொலையில் சம்பந்தப்படாத லக்ஷக்கணக்கான கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டியது நியாயம் தானேசெயல் தலைவர் தலைவர் ஆனதும் நடத்தியே சரி இல்லையே?மேலும் விசாரணை சரி இல்லை என்பதும் உண்மையாக இருக்கலாம் ,ஏனென்றால் திமுக கட்சியினரின் பங்கு என்று இதை எவருமே குற்றம் சாற்றப்படலையே?

Rate this:
எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா
08-செப்-201814:13:09 IST Report Abuse

எஸ்.பொன்னப்பன்  என்ன வினோதம்? முன்னாள் நம் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை கொடூரமாக கொன்ற கொலை கைதிகளை விடுதலை செய்ய காங்கிரஸ் ஆதரவு , பா ஜ க எதிர்ப்பு ...... எங்கே செல்கிறது தேசம்?சட்ட திட்டங்களை மாற்றி அரபு நாடுகளை போல உடனடி தண்டனையே தீர்வு , குற்றங்கள் பெருகாமல் குறைய வழி பிறக்கும். தீவிர தண்டனையே ராஜிவ் ஆன்மா சாந்தியடையும்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-செப்-201820:48:34 IST Report Abuse

Pugazh V//ஒரு நல்ல தலைவனை நாசம் செய்து விட்டார்கள்.// இந்த வரிக்கு மிக்க நன்றிகள்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X