2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Added : செப் 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2,000,தற்காலிக, ஆசிரியர்கள், நியமனம்
அமைச்சர் ,செங்கோட்டையன் ,அறிவிப்பு

சென்னை:''அரசு பள்ளிகளில், 2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeans bala - CHENNAI,இந்தியா
07-செப்-201814:44:20 IST Report Abuse
jeans bala 7500 yaarum velaikku varamattargal yen endral nirandara aasiriyargalukku 60 ayiram niyayama darmama
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
07-செப்-201810:05:33 IST Report Abuse
Giridharan S ஏற்கனவே பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களின் பணியினை நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் அதே மாதிரி நியமனம் செய்து அப்புறம் போராட்டம் அது இதுனு வந்து அவர்களை நிரந்தரமாக்குங்கள். இப்பவே இது என்ன விலை போகப் போகிறதோ. அரசு எந்த எந்த பள்ளிகளில் கூடுதல் பணியிடம் உள்ளதோ அது அரசு பள்ளியாக இருந்தாலும் உதவி பெரும் பள்ளியாக இருந்தாலும் அது எந்த பதவியாக இருந்தாலும் சரி, அதாவது முதுகலை பட்டதாரி இடைநிலை கைத்தொழில் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை கணக்கிட்டு தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடத்துடன் மாற்றம் செய்ய வேண்டும் அதை செய்தாலே போதும் அதை விட்டுட்டு தேவை அற்ற வழிகளில் நியமனம் செய்து கல்வித்துறையை பால் பண்ண வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201808:20:21 IST Report Abuse
Srinivasan Kannaiya இதில் கட்சிக்காரர்கள் எவ்வளவு கல்லா கட்டப்போகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X