105-வது பிறந்த நாள் கொண்டாடிய தியாகி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

105-வது பிறந்த நாள் கொண்டாடிய தியாகி

Added : செப் 07, 2018 | கருத்துகள் (5)
Advertisement
105-வது பிறந்த நாள் கொண்டாடிய தியாகி

கல்லல் : சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்தவர் பழனியப்பன். சுதந்திர போராட்ட தியாகியான இவர் நேற்று தனது 105வது பிறந்த நாளை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

இவரது நான்கு மகன்களான காமராஜ்,65, ஜெயராஜ்,63, சவுந்திரபாண்டியன்,60, மனோகரன்,53 மற்றும் மருமகள்கள், ஏழு பேரன்கள் அவர்களின் மனைவிகள், ஐந்து கொள்ளு பேரன்கள், 2 கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். மகன்களில் இருவர் காலமாகி விட்டனர்.

ஜெயராஜ் கூறும்போது: அப்பா அவரது வேலைகளை அவரே கவனித்து வருகிறார். இதுவரை கண்ணாடி அணிந்தது கிடையாது. தினமும் 'தினமலர் நாளிதழ்' படிக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 'இந்திய தேசிய ராணுவத்தில்' பணியாற்றியுள்ளார்.

சுதந்திரத்துக்கு பிறகு மலேசியாவில் பணியாற்றினார். தமிழக அரசு இவருக்கு தியாகிகளுக்கான பென்ஷன் வழங்கி வருகிறது. அவரது பிறந்த நாளுக்கு துாத்துக்குடி, சென்னை, கும்பகோணத்திலிருந்து மகன்கள், பேரன், பேத்திகள் வந்திருந்தனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X