மாநில கல்லூரியில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கல்லூரியில் ஆய்வு

Added : செப் 07, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை மாநிலக் கல்லுாரியில், 'நாக்' தர மதிப்பீட்டுக் குழுவினர், இரண்டு நாட்கள் ஆய்வை துவங்கியுள்ளனர்.தமிழகத்தின் மிக பழமையான அரசுக் கல்லுாரியான, சென்னை, மாநிலக் கல்லுாரி, 'நாக்' என்ற, தேசிய தர மதிப்பீட்டு அமைப்பால் வழங்கப்படும் தரவரிசையில், 'ஏ கிரேடை' பெற்று, செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நாக் தர மதிப்பீட்டைப் புதுப்பிக்க, மாநிலக் கல்லுாரி விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை ஏற்று, நாக் அமைப்பின் ஆய்வுக் குழுவினர், மாநிலக் கல்லுாரிக்கு, நேற்று வந்தனர்.ராஜஸ்தான் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், திரிவேதி தலைமையிலான மூன்று பேர் குழு, ஒவ்வொரு பாடப் பிரிவாக ஆய்வைத் துவங்கியுள்ளனர். இந்த ஆய்வு, இன்றும் நடக்கிறது.கல்லுாரியில் உள்ள, 26 துறைகளுக்கும் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.உள் கட்டமைப்பு, நுாலகம், ஆய்வகம், கழிப்பறை, ராகிங் தடுப்பு நடவடிக்கை, விளையாட்டு மைதானம், ஆராய்ச்சிப் படிப்பு, மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர்.முதல்வர், ராவணன் தலைமையிலான பேராசிரி யர்கள் குழு, நாக் கமிட்டியிடம் உரிய விளக்கங்களை அளித்துள்ளனர். இந்தக் குழு, ஆய்வை முடித்து, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின், நாக் நிறுவனம் உரிய மதிப்பீட்டை வழங்கும்.
.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X