குட்கா ஊழல் பற்றி அரசிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை: ஜார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா ஊழல் பற்றி அரசிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை: ஜார்ஜ்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குட்கா ஊழல், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்,  டிகே ராஜேந்திரன், துணை ஆணையர் ஜெயக்குமார், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் , சிபிஐ விசாரணை, குட்கா விவகாரம், குட்கா குடோன் ,   ராஜேந்திரன், துணை ஆணையர் விமலா, திமுக எம்எல்ஏ அன்பழகன், 
Former Commissioner George, TK Rajendran, Deputy Commissioner Jayakumar, former Chennai Police Commissioner George, CBI investigation, Gudka affair, Gudka Godown, Rajendran, Deputy Commissioner Vimala, DMK MLA,Gudka scandal

சென்னை: குட்கா ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார்.


பெயர் இல்லை

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை குறித்து அவர் கூறியதாவது: 33 ஆண்டு காலமாக பணியில் இருந்த நான் தவறு செய்யவில்லை. பணம் எதுவும் வாங்கவில்லை. 2015 அக்டோபர் முதல் 2016 செப்., வரை நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை. 2016 செப்டம்பரில் தான் நான் கமிஷனராக பதவியேற்றேன்.
குட்கா விவகாரத்தில் பணம் அளிக்கப்பட்டதாக கூறப்படும் தேதிகளிலும், திமுக எம்எல்ஏ அன்பழகன் மனுவில் குறிப்பிட்ட தேதிகளிலும் நான் நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை. சிபிஐ எப்ஐஆரிலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.


ஆலோசனை

நான் போலீஸ் கமிஷனராக பதவியேற்றதும், குட்கா ஊழல் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. போலீஸ் கமிஷனர்கள் சிலரது பெயர்களும் அடிபட்டன. எனது கவனத்திற்கு வந்த போது, மேலிடத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
குட்கா குடோன் என புகார் கூறப்பட்ட இடத்தில், சோதனை செய்த போது புகையிலை எதுவும் இல்லை என அறிக்கை அளித்தனர். இதனால், உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு நான் கடிதம் அனுப்பியது அனைவருக்கும் தெரியும். ஊழல் குறித்து எனது கவனத்திற்கு வந்தபோதே மேலிடத்தில் இது குறித்து ஆலோசனை நடந்தது. அந்த சமயத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


பணித்திறமை இல்லாதவர்

குட்கா விவகாரம் தொடர்பாக மாதவரத்தில் துணை கமிஷனராக இருந்த விமலாவை அழைத்து விசாரித்தேன். ஆனால், எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்த விவரத்தை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டதாக தெரிவித்தார். குட்கா குடோனை சோதனை செய்ய சென்ற போலீசாரை துணை கமிஷனராக இருந்த ஜெயக்குமார் வேறு பணிக்கு செல்லுமாறு கூறினார். எனது கவனத்திற்கு வந்த போதே பல காலமாக இந்த பிரச்னை இருப்பது தெரியவந்தது.

2015 ல் போலீஸ் உயரதிகாரி நல்லசிவத்திடம் குட்கா விவகாரத்தை தெரிவிக்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, துணை ஆணையர் ஜெயக்குமார் எதுவும் சொல்லவில்லை என்றார். 2016 ல் வரதராஜூவிடம் குட்கா குறித்து கேள்வி எழுப்பினேன். அவரும் தெரியாது என கூறினார்.
உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜூ குட்கா விவகாரம் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா என டிகே ராஜேந்திரனிடம் கேட்ட போது, தனக்கு எந்த தகவலும் தெரியாது எனக்கூறினார். சட்டவிரோத செயல் குறித்து உளவுத்துறை தகவல் அளித்தும் துணை ஆணையர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயக்குமார் பணித்திறமை இல்லாதவர் என நான் ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். மோசமாக பணியாற்றுவதாக அறிக்கை சமர்ப்பித்தேன். அவர் அனைத்து உண்மைகளையும் மறைத்து விட்டார்.


உள்நோக்கம்

குட்கா விவகாரத்தில் என்னை குறி வைத்து செயல்படுவது வருத்தம். குட்கா போன்ற பெரிய விவகாரம் போலீஸ் கமிஷனர் ஆதரவுடன் மட்டும் நடக்குமா? தமிழகத்தில் முறைகேடாக குட்கா விற்க நான் லஞ்சம் வாங்கவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நான்பணம் வாங்கியதாக கூறப்படுவது தவறு. முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவருக்கு எதற்காக பணம் தரப்போகிறார்கள். குட்கா ஊழல் நடக்கவில்லை எனக்கூறவில்லை. நடந்திருக்கிறது. யாரும் பணம் பெறவில்லை எனக்கூறவில்லை. யார் பெற்றார்கள் எனத்தெரியாது.
எனது பெயரை சேர்த்தில் 100 சதவீத உள்நோக்கம் உள்ளது. டிகே ராஜேந்திரனையும் என்னையும் போலீஸ் டிஜிபியாக நியமிக்கக்கூடாது என்பதற்காக இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கலாம். ராஜேந்திரனை டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ஆவணங்கள் வெளியிடப்பட்டன. வேண்டுமென்றே சிலரது பெயரை சேர்த்து கசியவிட்டனர். துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் உயரதிகாரிகளுக்கு சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navin - Chennai,இந்தியா
07-செப்-201821:26:46 IST Report Abuse
Navin Jaikumar is now in villuppuram SP. He is good officer. He was in the team bawaria operation. He is one of the good officer
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-செப்-201820:56:47 IST Report Abuse
Pugazh V // ஆக குட்கா ஊழல் நடந்திருக்கிறது..... அரசுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது..... இதற்கு என்ன பதில் தரப்போகிறார்கள்... ஓபிஎஸ் & ஈபிஎஸ்...??// மிகச் சரியான கேள்வி. வழவழான்னு சொதப்பாமல் ரெண்டே வரியில் சூப்பர். பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
07-செப்-201820:26:56 IST Report Abuse
Suri தலைமை பண்புக்கு ஒரு மட்டமான உதாரணம் இந்த ஆள். மட்டமான தலைமையால் சுயலாபங்களுக்காக தேர்தெடுக்கப்பட்ட மற்றோரு மட்டமான தாலமி தான் இந்த ஆள். தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னிடம் பணி புரிந்த அதிகாரிகளின் பெயரை ஒரு பத்திரிக்கை சந்திப்பு நடத்தி வெளியிட யார் இந்த ஆள்? பேரிடப்பட்ட அதிகாரிகளுக்கு மறுப்பு தெரிவிக்க ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நிலையில் பணியில் இருக்கும் அதிகாரிகள் இந்த கூட்டு களவாணி மீதி மான நஷ்ட வழக்கு தொடரவேண்டும். அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆனாலும் இப்படிப்பட்ட அதிகாரிகளின் ரகசிய ஆண்டறிக்கையை பொதுவெளியில் கூறுவது தனி நபர் உரிமையில் தலையிடுவதே ஆகும். இது கூட தெரியாமல் இந்த ஆள் ஒரு IPS அதிகாரியானது எப்படி? இதற்க்கு தான் கூறினேன் தகுதியே இல்லாத தலைமை பண்பு இல்லாத ஒரு ஆள், மட்டமான தலைமையினால் இப்படிப்பட்ட பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பத்திரிக்கையாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க த்ராணியில்லாமல் தெரியாது என்று கூற வெட்கப்பட வேண்டும்.ஒரு குற்றவாளி போலீஸிடம் தெரியாது என்று கூறினால் விட்டுவிடுவார்களா?முட்டிக்கு முட்டி தட்ட மாட்டார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X