Anwar surprises Seri Setia voters with MGR song and dance | மலேசியாவில் ஓட்டுகளை வாங்கித்தரும் எம்ஜிஆர் பாடல்| Dinamalar

மலேசியாவில் ஓட்டுகளை வாங்கித்தரும் எம்ஜிஆர் பாடல்

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எம்ஜிஆர், மலேசியா, பாடல்,

பெடலிங் ஜெயா: மலேசியாவில் நடக்கும் இடைத் தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்கு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுகின்றன. எம்.ஜி.ஆர்., பாடலுக்கு அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் நடனமாடினார்.

மலேசியாவின் செலங்கூர் பகுதியில் உள்ள செரி செடியா என்ற இடத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரம் செய்து வருகிறார். இவர் முன்னாள் துணை பிரதமர்.

தேசா மந்திர் பகுதியில், இந்திய கலசாசார இரவு என்ற நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவர் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாட்டிற்கு நடனமாடி கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வர் இப்ராஹிம், மேடையில் ஏறி பாடலுக்கு நடனமாடினார். இதற்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மலேசியாவின் செரி செடியா என்ற பகுதியில், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரம் செய்து வருகிறார். இதனிடையே தேசா மந்திர் பகுதியில்,நடந்த இந்திய கலசாசார இரவு என்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவர் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாடலுக்கு நடனமாடினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வர், மேடையில் ஏறி எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் செய்தார்.

அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அரசியலுக்கு எம்.ஜி.ஆர்., பாடல்கள் பயன்படுவது ஆச்சரியம் தான்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201808:12:04 IST Report Abuse
Srinivasan Kannaiya பட்டுக்கோட்டையார், வாலி, கண்ணதாசனுக்கு போகட்டும் அந்த புகழ் அனைத்தும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201808:11:16 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த பாடல்களில் இருக்கும் கருத்துகளை உள்வாங்கி அரசியல்வாதிகள் நடந்தா ....தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201808:10:03 IST Report Abuse
Srinivasan Kannaiya உள்நாட்டு சரக்கு இங்கே விலைபோகவில்லை... அங்கே விலை போகிறது... இங்கே ஐநூறு, பிரியாணி, குவாட்டருக்கு விலைபோகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X