பா. ஜ., - எம்.எல்.ஏ., நாக்கை அறுத்தால் ஐந்து லட்சம் பரிசு| Dinamalar

பா. ஜ., - எம்.எல்.ஏ., நாக்கை அறுத்தால் ஐந்து லட்சம் பரிசு

Added : செப் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா. ஜ., - எம்.எல்.ஏ., நாக்கை அறுத்தால் ஐந்து லட்சம் பரிசு

நாக்பூர்: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., நாக்கை அறுத்து, எடுத்து வருபவருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்,'' என, காங்கிரசைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர், சுபோத் சவ்ஜி அறிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மஹாராஷ்டிராவின் கட்கோபர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆக இருப்பவர், ராம் கதம், சமீபத்தில், இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம் கதம், 'காதலிக்கும் பெண்கள், உங்களுடன் வர மறுத்தால், எனக்கு போன் செய்யுங்கள். நான் அவர்களை கடத்தி வந்து, திருமணம் செய்து வைக்கிறேன்' என்றார். மேலும், தன் மொபைல் போன் எண்ணையும் அறிவித்தார்.எம்.எல்.ஏ.,வின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் பரவியது. பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து, ராம் கதம் நீக்கப்பட்டார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மஹாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர், சுபோத் சவ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இளம்பெண்களை கடத்துவேன் என கூறிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கதம் நாக்கை அறுத்து எடுத்து வருபவருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
08-செப்-201806:31:14 IST Report Abuse
sudharshana மக்களே எந்த கட்சியானாலும் இதுதான் இவர்கள் நாட்டு க்காக ஏழை எளியவர்களுக்காக , பசி பட்டினிக்காக, நோய் நலிவு களுக்காக, கண்ணீர் வேதனைகளுக்ககா, சகல இழிவுகளுக்காக நம் நாட்டிற்க்காக செய்யும் அறிய சேவை, தங்க நேரத்தை எல்லாம் நாட்டிற்க்காகவே அர்ப்பணிக்கிற தொண்டு மக்களே விழித்துக்கொள்ளுங்கள் ஓரம் கட்டுங்கள் உயர்ந்து நில்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X