பெட்ரோல் விலை குறைய ஜெயகுமார் யோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை குறைய ஜெயகுமார் யோசனை

Added : செப் 08, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெட்ரோல் விலை குறைய ஜெயகுமார் யோசனை

சென்னை: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில், மத்திய அரசு, வரி குறைப்பு செய்தால் நன்றாக இருக்கும்,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசுக்கு வரி ஈட்ட, பல வழிகள் உள்ளன. ஆனால், மாநில அரசுக்கு, குறைந்த அளவிலேயே வரி ஈட்டக் கூடிய வாய்ப்பு உள்ளது. நாம் ஈட்டக் கூடிய வரியில் இருந்து, பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நாம் வரி குறைப்பு செய்தால், அடித்தட்டு மக்களுக்கு, வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். மத்திய அரசிற்கு, பல்வேறு வழிகளில் வரி வரும் நிலையில், அவர்கள், வரி குறைப்பு செய்வதில் பெரிய பிரச்னை இல்லை.பெட்ரோல், டீசல் மீதான, மத்திய அரசின் வரி, 16 ரூபாய் என்பதை, பாதியாக குறைத்தால், பொது மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். மத்திய அரசில், 16 ஆண்டுகள், தி.மு.க., அங்கம் வகித்தது. அப்போது, அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
08-செப்-201813:19:35 IST Report Abuse
Viswanathan "நாம் ஈட்டக் கூடிய வரியில் இருந்து, பொது மக்களுக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன." நான் பார்த்தாலும் பார்த்தேன் , இவரை போல டுப்பாக்கூர் அமைச்சரை பார்த்தத்திலே
Rate this:
Share this comment
Cancel
08-செப்-201811:26:27 IST Report Abuse
கஞ்சிக்கு சிஞ்கி அடிப்பவன் நாட்டின் 85 % செல்வம் 10 % மக்களிடம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் பெரும்பாலோர் அரசியல்வாதிகள், பெரிய வியாபாரிகள், அவர்கள் வரி ஏய்ப்பு செய்யும் அத்தனை வழியும் தெரியும், செய்கிறார்கள். அவர்களிடம் வரி வசூல் முடியாத காரணத்தினால், பாமர மக்கள் தலையில் கை வைக்கிறார்கள். இந்த அரசை என்ன சொல்றது, தோல்வியை மனத்தளவிலாவது ஒத்துக்கொண்டால்தான் மாற்றம் வரும். மறைக்க முயன்றால் அகல பாதாளமே, இதனால்தான் எல்லாம் அறிந்த அறிஞர்கள் நாட்டை விட்டு போய்விடுகிறார்கள். இவனுன்னு பொது அறிவு கிடையாது, அறிவு கிடையாது, அறிவியல் அவியல் ஞானமும் கிடையாது, அந்தம்மா இவனுங்கள இப்படி திடுதிடுப்பு விட்டு போயிருச்சு இவனுங்க நம்ம உசுர வாங்கறானுங்க.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா
08-செப்-201811:07:01 IST Report Abuse
கல்யாணராமன் S. நான் இன்னோர் யோசனை சொல்கிறேன். மந்திரிகள், அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் அடித்த அத்தனை ஊழல் பணத்தையும் கருவூலத்தில் சேர்த்துவிடுங்கள். தேவையில்லாத ஓட்டை டிவி, லேப்டாப், கிரைண்டர் ஆகியவற்றை ஓசியில் கொடுப்பதை நிறுத்துங்கள். அப்புறம் பாருங்கள்............நீங்கள் உலக வங்கிக்கே கடன் கொடுக்கு அளவுக்கு பணம் உங்கள் அரசிடம் இருக்கும்..........என்ன நான் சொல்றது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X