அமைச்சரை நெருங்காதது ஏன்? சி.பி.ஐ.,க்கு தி.மு.க., கேள்வி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சரை நெருங்காதது ஏன்?
சி.பி.ஐ.,க்கு தி.மு.க., கேள்வி

சென்னை : 'குட்கா ஊழல் வழக்கில், கைது நடவடிக்கை எடுத்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், அமைச்சர், டி.ஜி.பி.,யிடம் நெருங்காமல், தயங்கி நிற்பது ஏன்?' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரை,நெருங்காதது ஏன்?,சி.பி.ஐ.,தி.மு.க.,கேள்வி


அவரது நேற்றைய அறிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், டி.ஜி.பி.,க்கும், லஞ்சம் கொடுத்த மாதவ ராவையும், அந்த லஞ்சத்தை உரியவர்களிடம் சேர்த்த இடைத்தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் எல்லாம், 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனையும், கைது செய்யாத

மர்மம் என்ன என்பது, இன்னும் விளங்கவில்லை. ஊழல் வழக்கில், லஞ்சம் பெற்றவர்களை, முதலில் கைது செய்வதே வழக்கம். ஆனால், குட்கா ஊழல் வழக்கில், லஞ்சம் பெற்றவர்களை, பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்தவர்களையும், இடைத்தரகர்களையும், சி.பி.ஐ., முதலில் கைது செய்திருக்கிறது.

லஞ்சம் கொடுத்தவர், இடைத்தரகர், மத்திய அரசு அதிகாரிகள் கைது என, தீவிர நடவடிக்கை எடுத்து வரும், சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அமைச்சரிடமும், டி.ஜி.பி.,யிடமும் நெருங்காமல், தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எனவே, ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள், பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி., ராஜேந்திரனையும், உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கவர்னரை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமின்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில், அமைச்சரையும், டி.ஜி.பி.,யையும் உடனே கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

காங்கிரஸ், 'பந்த்'துக்கு ஆதரவு:

'பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய அளவில், நாளை மறுநாள், காங்கிரஸ் கட்சி நடத்தும், 'பந்த்' போராட்டத்துக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், நாளை மறுநாள், அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த்திற்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும். அனைத்து தரப்பு மக்களும், தன்னார்வத்துடன் பங்கேற்று, மத்திய அரசுக்கு, தக்க பாடம் புகட்ட முன்வர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை முன், நேற்று தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்று, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பினர்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-செப்-201813:46:41 IST Report Abuse

balஉன்னிடமும் நெருங்கவில்லையே....நீர் முதலில் உன் அப்பாவிடம் கேள்வி கேட்டிரா..ஊழல் செய்தபோது

Rate this:
09-செப்-201800:17:44 IST Report Abuse

நக்கல்ஆமாம்,கோபாலபுரம் வீடு எப்போ ஆஸ்பத்ரி ஆகும்.. அப்பா உயில்ல கைநாட்டு வெக்க மறந்துட்டாரா???

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-செப்-201822:43:31 IST Report Abuse

Pugazh Vஎந்த கட்சியுமே இதைப்பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை என்று யோசித்தார்களா? எதிர் கட்சி இப்படித்தான் கேள்விகள் எழுப்ப வேண்டும். இது ஜனநாயக கடமை. தேமுதிக எதிர்கட்சி யாக இருந்தது போல எல்லாத்துக்கும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?

Rate this:
09-செப்-201800:13:42 IST Report Abuse

நக்கல்இவர் தருமி மாதிரி கேள்விதான் கேட்கத்தெரியும் , ஒரு வித்யாசம்.. தருமிது சொந்த கேள்விகள் பதில் எழுதி கொடுத்தது.. ஆனால் சுடாலினோட கேள்வியே சொந்தமானது கிடையாது.. யாரோ அறிவாலயத்துல எழுதி கொடுத்தது......

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X