எதிரிகளை அழிக்கும் ராணுவ 'ரோபோ'| Dinamalar

எதிரிகளை அழிக்கும் ராணுவ 'ரோபோ'

Added : செப் 08, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எதிரிகளை அழிக்கும் ராணுவ 'ரோபோ'

எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, ராணுவத்தை பல வழிகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன. இதற்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள், அணு ஆயுதம், போர் விமானம் தாங்கி கப்பல், பீரங்கி என பல வகையிலும் நாடுகள் போட்டி போட்டு தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் மாஸ்கோவில் நடந்த 'சர்வதேச ராணுவ கண்காட்சி - 2018'ல், இந்த ராணுவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இக்கண்காட்சியில் பல்வே நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ரஷ்யாவின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான இது, ஏகே.47 துப்பாக்கிகளை அறிமுகம் செய்த பெருமைக்குரியது.


13 அடி உயரம்:

எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவுக்கு, 'இகோரெக்' என பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து சென்று எதிரிகளுடன் சண்டையிடும் திறன் பெற்றது.

இது கையில் ஆயுதங்களை வைத்து எதிரிகளை தாக்கும். இந்த ரோபோவின் ஒரு பகுதியில் கேபின் ரூம் இருக்கும். இதில் பைலட் ஒருவர் அமர்ந்து கொண்டு, ரோபோவை இயக்க வேண்டும். கேபினுக்குள் இருக்கும் பைலட், எதிரிகளால் தாக்கப்படாமல் இருப்பதற்காக, கேபின் ரூம் புல்லட் புரூப் செய்யப்பட்டுள்ளது. ரோபோ 13 அடி உயரம் கொண்டது. எடை 4,080 கிலோ. ரோபோவை மேலும் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201809:28:51 IST Report Abuse
Srinivasan Kannaiya 'இகோரெக்' உயிர் பலிகளை தடுக்கிறது அல்லவா..
Rate this:
Share this comment
Cancel
GBR -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-201812:38:43 IST Report Abuse
GBR இந்த மாதிரி robot இந்தியா தயாரித்து காஷ்மீர் பகுதியில் பயன் படுத்த வேண்டும் என்று நான் நீ‌ண்ட நாள் நினைத்தது உண்டு
Rate this:
Share this comment
Cancel
NaanPeriyavan - Pudukottai,இந்தியா
08-செப்-201811:48:26 IST Report Abuse
NaanPeriyavan ஏண்டா ஆப்பு. உனக்கு வேற வேலையே இல்லையா. எல்லாத்துக்கும் குறை கண்டு புடிக்கிறத்திலேய இருக்க. யாருக்கு கைக்கூலி வேல பார்க்குறேன்னு தெரியல. உன்ன மாதிரி சில பச்சோந்திகள் மேலும் நாட்டுக்கு எதிரே, நல்ல திட்டங்களுக்கு எதிர் குரல் கொடுத்து கொண்டே... போய் சேர வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X