Yogi Adityanath likens Akhilesh Yadav to Aurangzeb who 'jailed his father' | சமாஜ்வாதி கட்சியில் நடப்பது அவுரங்சீப் கதை| Dinamalar

சமாஜ்வாதி கட்சியில் நடப்பது அவுரங்சீப் கதை

Updated : செப் 08, 2018 | Added : செப் 08, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சமாஜ்வாதி, கட்சி, நடப்பது. ஒளரங்சீப். கதை

லக்னோ: சமாஜ்வாதி கட்சி்க்குள் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் மொகலாய மன்னர் அவுரங்சீப்பை மகன் சிறையில் வைத்த கதை தான் நினைவுக்கு வருகிறது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகி ஆதித்யநாத்பேசியது, சமாஜ்வாதி கட்சிக்குள் நடக்கும் உள்குத்து அரசியலை நாடறியும், அண்ணன் முலாயமின் வலதுகரமாக இருந்த தம்பி சிவபால் யாதவ் கட்சியைவிட்டு வெளியேறினார். கட்சியை முலாயமின் மகன் அகிலேஷ் கைப்பற்றி தந்தையை செயல்படவிடாமல் முடக்கி வைத்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது வரலாற்றில் மொகலாய மன்னர் அவுரங்சீப்பை மகன் சிறையில் வைத்தது போன்று தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

இது குறித்து அகிலேஷ் கூறுகையில், மாநிலத்தில் ஜாதி அரசியலை முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்தி வருகிறார். ஒரு சாமியாரை பா.ஜ.வினர் முதல்வராக்கியுள்ளனர். இவரது ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-செப்-201812:39:29 IST Report Abuse
Rafi அவுரங்கசீப் மிகவும் எளிமையாக வாழ்ந்த மன்னர், அரசு பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு பயன் படுத்தவில்லை. இன்றைய காசி கோவிலில் பலான காரியத்தில் ஈடுபட்ட தகவல் குறுநிலமன்னர்களால் மன்னருக்கு தீட்டாகிவிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், இன்றைய பொலிவுடன் கூடிய காசி கோவிலை கட்டி கொடுத்த வரலாறு இன்றும் சாட்சியாக இருக்கு. ஆனால் சாமியார்கள் என்ற போர்வையில் ராஜபோக வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருப்பவர் அடுத்த கட்சியை குறை கூறுவதற்கு கூட இஸ்லாமிய மன்னர்களை துணைக்கு அழைத்து அதிலும் மத துவேஷ கருத்துக்களை திணித்து தன்னுடைய பதவிக்கு ஆபத்து வராமல் தக்க வைக்க முற்பட்டுள்ளார்.
Rate this:
Share this comment
08-செப்-201814:01:33 IST Report Abuse
நக்கல்அவர் செய்த நல்லது என்று கம்யுனிஸ்ட் எழுதிய சரித்திர புத்தகத்தில் இருந்து சொல்லிவிட்டீர்கள்.. அவர் செய்த கொடுமைகளை சொல்ல முடியுமா??? மொகலய அரசர்களில் மிகவும் கொடுமையானவன்.. 45 லட்சம் ஹிந்து சீக்கியர்களை கொலை செய்தவன், இதுபோல் இன்னும் பல.. பின்லாடென், ஔரங்சீப் போன்ற கொடூரர்களை தூக்கிபிடிப்பதை நிறுத்துங்கள்......
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-செப்-201821:39:19 IST Report Abuse
Rafi இன்றைய சீக்கிய மக்களின் ஜனத்தொகையோடு கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் 45 லட்ச சீக்கியர்கள் மொத்தமும் இருந்திருப்பார்களா என்று கேள்வி கேட்டு பாருங்கள், அப்போது உங்களின் கணக்கு சரியா என்பதற்கு விடை கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
08-செப்-201811:35:48 IST Report Abuse
Ramshanmugam Iyappan பிஜேபி விரைவில் மக்கள் செல்வாக்கை இழக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
08-செப்-201810:51:33 IST Report Abuse
Kumar உன் கட்சியில் நடப்பது குரங்கு கதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X