அமெரிக்க துப்பாக்கி சூடு ஆந்திர இளைஞர் பலி| Dinamalar

அமெரிக்க துப்பாக்கி சூடு ஆந்திர இளைஞர் பலி

Added : செப் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நியூயார்க்/: அமெரிக்க வங்கியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய இளைஞர் பலியான தகவல் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின், மிகப் பழமையான, 'பிப்த் தேர்ட்' வங்கியின் கிளை, சின்சினாட்டி நகரில் உள்ளது. நேற்று முன்தினம், வங்கிக்குள் புகுந்த, ஒமர் என்ரிக் சந்தா பெரேஸ், ௨௯, என்பவன், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். குண்டு பாய்ந்து, மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். வங்கி அருகே காவல் பணியில் இருந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒமர், சுருண்டு விழுந்து இறந்தான்.இந்த தாக்குதலில் பலியான மூன்று பேரில், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த, பிரித்விராஜ் கந்தெபி, ௨௫, என்ற இளைஞரும் ஒருவர் என்பதை, இந்திய துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வங்கியில், வாடிக்கையாளர்களுக்கான ஆலோசகராக பிரித்விராஜ் பணியாற்றி வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X