உச்சிப்புளியில் ரூ.1 கோடி பிரவுன் சுகர் பறிமுதல் : கள்ள நோட்டுகளும் சிக்கின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்சிப்புளியில் ரூ.1 கோடி பிரவுன் சுகர் பறிமுதல் : கள்ள நோட்டுகளும் சிக்கின

Added : செப் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உச்சிப்புளியில் ரூ.1 கோடி பிரவுன் சுகர் பறிமுதல் : கள்ள நோட்டுகளும் சிக்கின

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பிரவுன் சுகர் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நொச்சியூரணியை சேர்ந்த சிவசங்கர்,35, சிவகாந்தன்,33, ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்துகின்றனர். இங்கு போதை பொருள் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் அங்கு நேற்று மாலை 5:30 மணிக்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது கோடவுனில் மூன்று பாக்கெட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காபூலில் தயாரிக்கப்பட்ட 1 கிலோ பிரவுன் சுகர் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.மேலும், அங்கு சோதனை செய்த போது, கள்ள நோட்டுகளும் சிக்கின. 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 70, 200ரூபாய் கள்ள நோட்டுகள் 67, 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 59 என, 54,300 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது. இது தொடர்பாக சுத்திகரிப்பு நிலையம் நடத்தி வந்த சிவசங்கர், சிவகாந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கூறுகையில், 'பிரவுன் சுகர்' தரம் குறித்து ஆய்வக சோதனைக்கு அனுப்ப உள்ளோம், அதன் பின்னர் தான் முழு விவரம் தெரியவரும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
08-செப்-201811:14:14 IST Report Abuse
christ ithupola kutra seyalkalil idupadum natharikalai thookil podunga .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X