அமைச்சர் பெயர் 'மிஸ்டர் 40 சதவீதம்' : த.மு.மு.க., பொதுச்செயலர் கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பெயர் 'மிஸ்டர் 40 சதவீதம்' : த.மு.மு.க., பொதுச்செயலர் கிண்டல்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:''தமிழக அரசில் முக்கிய பதவியில் உள்ள அமைச்சரை '40 சதவீதம்' என அழைக்கின்றனர்,'' என த.மு.மு.க., மாநில பொதுச்செயலர் ஐதர் அலி கூறினார்.
அவர் கூறியதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க அக்., 7 ல் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசு தடையாக இருந்தது. அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. இதில் முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை.உள்ளாட்சி அதிகாரிகள் கமிஷனுக்காக மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசில் முக்கிய பதவியில் உள்ள அமைச்சரை '40 சதவீதம்' என ஒப்பந்ததாரர்கள் அழைக்கின்றனர். கமிஷனும் ஊழலும் நிறைந்த தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், பாடிக், இப்ராஹிம், மாவட்ட பொறுப்பாளர் பாதுஷா உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharshana - Aukland ,நியூ சிலாந்து
08-செப்-201806:03:41 IST Report Abuse
sudharshana அவரை அப்படி அழைப்பது சரி, அடுத்து அவரை தேர்வு செய்யாமல் இருப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X