BJP to Hold Two-day National Executive Meeting Starting Today | பா.ஜ., செயற்குழு கூட்டம் டில்லியில் இன்று துவக்கம்| Dinamalar

பா.ஜ., செயற்குழு கூட்டம் டில்லியில் இன்று துவக்கம்

Added : செப் 08, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர் மோடி , பாஜக செயற்குழு கூட்டம், லோக்சபா தேர்தல் 2019, பிரதமர் நரேந்திர மோடி ,  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , அமித் ஷா ,நரேந்திர மோடி ,  மோடி , பாஜக, டில்லி பாஜக செயற்குழு கூட்டம், வாஜ்பாய் மறைவு, 
Prime Minister Modi, BJP executive meeting, Lok Sabha election 2019, PM Modi,
Prime Minister Narendra Modi, BJP national president Amit Shah, Amit Shah, Narendra Modi, Modi, BJP, Delhi BJP Working Committee meeting, Vajpayee death,

பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய் மறைவை அடுத்து, இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று மாலை, 4:00 மணிக்கு, டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச அரங்கில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தலைமையில், செயற்குழு கூட்டம்துவங்குகிறது.மீண்டும், நாளை காலை கூடும் செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட, 350க்கும் அதிகமான தலைவர்கள், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில், கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-செப்-201814:09:20 IST Report Abuse
Pugazh V நாலேமுக்கால் வருஷமா எந்த இந்திய குடிமகனைப் பற்றியும் கவலையே படாமல் அதிகார ஆணவ அராஜகப் போக்கில் எல்லாவரையும் தூக்கி எறிந்து பேசியும் எழுதியும், தப்பு களை சுட்டி காட்டுபனை தேசதுரோகி என்றும் நக்சல் என்றும் கட்சி ஆட்களை விட்டு பேசியும் எழுதியும், 62 அயல்நாடுகளுக்கு கலர் கலரா டிரெஸ் போட்டு சுத்திட்டு, தனி விமானத்தில் பறப்பதை உழைப்பு என்று பேசியும் எழுதியும் என்ஜாய் பண்ணியதோடு நல்லா இருந்த இந்திய நாட்டை நாசமாக்கி, மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு, அடுத்த தேர்தல் வந்ததும் தான் இந்தியா/ மக்கள் பற்றி இந்த தலைவர்களுக்கு நினைவு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
08-செப்-201812:44:58 IST Report Abuse
kowsik Rishi மோடி சார் உங்களின் முகத்தில் ஏன் இவ்வளவு கோபம் வெறுப்பு உங்கள் பக்கம் தான் ஆர் எஸ் எஸ் - இந்து மக்கள் கூட்டமும் உள்ளதே சந்தோஷமாக தான் இருங்களேன் யார் மேல் சார் இந்த கோபம் வெறுப்பு நாங்கள் தான் சிறுபான்மை மக்கள் - எங்களை பார்த்து நீங்கள் பயப்படுவதின் வெளிப்பாடா இந்த கோபம் வெறுப்பு நல்ல ஒற்றுமையாக இருந்த நாட்டை இந்திய மக்களை மதம் பிடிக்கவைத்து பிரித்து விடீர்களே சார் ஐந்து ஆண்டு ஆட்சிக்கு நீங்கள் பெரும் ஓட்டு - ஒரு யுகத்திற்கு மக்களை பிரித்துவைத்து விட்டீர்களே சார்
Rate this:
Share this comment
Cancel
SUNA PAANA - Chennai,இந்தியா
08-செப்-201811:55:08 IST Report Abuse
SUNA PAANA இவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க தயாராகுங்கள். நாட்டை சீரழித்து பொருளாதாரத்தை கெடுத்த பெருமை இந்த கூஓட்டத்தையே சாரும். இவர்களுக்கு கொடுக்கும் மரண அடி மற்ற கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X