குட்கா முறைகேடு : அமலாக்கத்துறை விசாரணை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா முறைகேடு : அமலாக்கத்துறை விசாரணை துவக்கம்

Updated : செப் 08, 2018 | Added : செப் 08, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குட்கா ஊழல், சிபிஐ, அமலாக்கத்துறை, சட்ட விரோத பண பரிவர்த்தனை

சென்னை : குட்கா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோதமாக பணம் கைமாறியது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையை தொடர்ந்து, சிபிஐ.,யும் சோதனை நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் வீடுகளில் 2 நாட்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியது.

சோதனையை தொடர்ந்து தற்போது கைது நடவடிக்கையிலும் சிபிஐ இறங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் குட்கா விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அமலாக்கத்துறையும், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணையை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-201820:45:59 IST Report Abuse
ஆப்பு அப்போ நேத்து வரை விசாரிச்சவங்க? ஓஹோ இவிங்க gst காரங்களோ?
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
08-செப்-201818:36:16 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் திமுக ஊழல் செய்யவில்லை .. மிகவும் நேர்மையான கட்சி .. இப்படி சொல்பவனுக்கு மனநிலை கண்டிப்பாக நல்ல நிலையில் இருக்காது. திமுக காரனுக்கே சிரிப்பு வரும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
08-செப்-201817:19:34 IST Report Abuse
தமிழ் மைந்தன் ஊழல் நாயகனை என்னவென்று அழைப்பது. இப்போது உள்ள ஆட்சியில் ஊழல் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் இதை சொல்ல தி.மு.க விற்கு எந்த அருகதையும் இல்லை எனென்றால் ஊழலை கண்டுபிடித்தது உலகிற்கு அறிமுகம் செய்ததே கருணாநிதி குடும்பம்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X