2019 ல் பா.ஜ., ஆட்சி : நிர்மலா| Dinamalar

2019 ல் பா.ஜ., ஆட்சி : நிர்மலா

Added : செப் 08, 2018 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
 2019, பா.ஜ., ஆட்சி, நிர்மலா, ராணுவதுறை, அமைச்சர், பிரதமர், மோடி, காங்கிரஸ்

புதுடில்லி: வரும் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிகப்படியான தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., ஆட்சி அமைக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
டில்லியில், 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது. பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித் ஷா குத்துவிளக்கேற்றி கூட்டத்தை துவக்கிவைத்தனர். வாஜ்பாய் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் பா.ஜ., செயற்குழு கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டம் தொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது , வாஜ்பாய் எங்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர். பிரதமராக இருந்த போது அவர் நாடு போற்றக்கூடிய அளவிற்கு சில முக்கிய முடிவுகள் எடுத்தார். நல்ல பல திட்டங்களை தீட்டினார். இவருக்கு இன்றைய கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரளாவில் வெள்ள பாதிப்பு தொடர்பாக விவாதித்தோம். கேரளாவுக்கு உதவி செய்ய வேண்டும் என தலைவர் அமித்ஷா கேட்டு கொண்டார்.

19 மாநிலங்களில் முழு மெஜாரிட்டியை பெற்று பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. சமீபத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தவறானது.


சாதனை பட்டியல்


ஆதார் மூலம் நேரடி மானியம் வழங்குவது, போஸ்டல் பேமென்ட் திட்டம், அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா கிடைக்கும் வகையில் உள்ளது. கறுப்பு பண ஒழிப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சமீபத்திய வருமான வரி தாக்கல் எண்ணிக்கை பெரும் அளவில் உயர்ந்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஏழைகள், விவசாயிகளுக்காக உழைக்கிறது. பிரான்சை முந்தி இந்தியா தற்போது உலக அளவில் இந்தியா உயர்ந்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு மூலம் சேமிப்பு உயர்ந்துள்ளது. இலவச காஸ், அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டம், மேக்இன் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 3 லட்சம் சட்ட விரோத கம்பெனிகள் கண்டு பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேக் இன் இந்தியா, ஆனால் காங்கிரஸ் பிரேக் இன் இந்தியாவாக இருக்கிறது.


மாவோ., நக்சல் ஆதரவு



முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏமாற்று நாடகம் ஆடுகிறது. மாவோ., நக்சல் விவகாரத்தில் காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடி விவாதம் நடத்த தயார். வரும் மாநில தேர்தலிலும் பா.ஜ., அமோக வெற்றி பெறும். ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகப்படியான தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். சட்டீஸ்கரில் ஆட்சி அமைப்போம். கடந்த காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் கட்சி கூறியதை பின்பற்றினார். ஆனால் பிரதமர் மோடி கட்சியை வழி நடத்தி செல்கிறார். இது தான் வேறுபாடு. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-செப்-201818:36:41 IST Report Abuse
Bhaskaran இன்னும் ஐந்து வருஷங்களுக்கு நீங்க மாதிரியாகவே இருக்கலாம் ஜமாயுங்க அம்மா
Rate this:
Share this comment
Cancel
Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா
09-செப்-201809:07:08 IST Report Abuse
Subramanian Srinivasan பாஜகவை இந்திய அளவில் ஊழல் காட்சியாகக் காட்டுவதே இந்த அம்மையாரின் துறை சார்ந்த ரபேல் விமான முறைகேடுகள் தான்.இதில் ஆட்சிக்கட்டில் கனவு வேறு ஒரு கேடு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-செப்-201808:05:59 IST Report Abuse
Srinivasan Kannaiya பொம்பள கனவு கண்டா பலிக்காது என்பாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X