'பயமின்றி கருத்து சொல்லும் சூழல் தேவை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பயமின்றி கருத்து சொல்லும் சூழல் தேவை'

Added : செப் 08, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கமல், யோகேந்திர யாதவ், சர்வாதிகாரம்

சென்னை: 'கருத்துகளை, மக்கள் பயமின்றி சொல்லும் சூழல் வர வேண்டும்' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், கமல் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியுள்ளதாவது: டில்லியைச் சேர்ந்த அரசியல்வாதி, யோகேந்திர யாதவ், தமிழக விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது, கைது செய்யப்பட்டு உள்ளார். இது, கடும் கண்டனத்திற்குரியது. சட்டத்தை காரணமாக சொல்லி, குரல் எழாமல் செய்யும் இந்த வேலை, சர்வாதிகாரம் என்றே, எனக்கு தோன்றுகிறது. இல்லையென்றால், இது, ஜனநாயக நாடு தான் என்பதை, ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
ஜனநாயகத்தின் வழியாக தான், சர்வாதிகாரிகள், உலகம் முழுக்க, ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றனர். அதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள், கருத்துகளை தெளிவாக, பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். இல்லையென்றால், வரவழைக்க வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalashamy - Srivilliputhur,இந்தியா
09-செப்-201812:32:19 IST Report Abuse
Gopalashamy பாரி - நீங்களும் ஆடுனற் பாடுனறாய் வேண்டி விரும்பி (வணங்கி) கேட்டால் நாட்டை தருகிறோம் என்று மூவேந்தர்களை பார்த்து கூறியதாக கூற்று உண்டு. அத்தகைய வள்ளல் வழி வந்த தமிழ் மக்கள் நாமும் கூத்தாடிகளை அரசராய் அமரச்செய்தோம். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம்.ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசர் ஆகலாம் ஆனால் என்ன தகுதி இருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்.தகுதி உள்ளவர்களை நாம் தேர்ந்தெடுத்து இருந்தால் பித்தர்களின் பிதற்றல்களை கேட்காது இருந்திருப்போமோ அரசியல் தொழிலாகிய இக்காலத்தில் ஊழலும் பதவி வெறியுமே கருத்தாகும் .அதை அடைவதற்கு நல்ல நடிகர்கள் தேவை அவர்களின் சூனியங்களை பிதற்றுவதற்கு சுதந்திரம் தேவை தானே .. இதுவும் கருத்து சுதந்திரம்.
Rate this:
Share this comment
Cancel
Mohan - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201810:40:26 IST Report Abuse
Mohan இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் பேசவில்லையே ஏன்
Rate this:
Share this comment
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-செப்-201810:37:07 IST Report Abuse
Chakkaravarthi Sk அடேங்கப்பா கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தாங்கள் பயமின்றி மரியாதையுடன் கருத்து சொல்வதாக சொன்னீர்களே? அப்போது பயம் இல்லையா இருந்ததா? மறந்து விடீர்களோ என்னமோ? ஜனநாயக நாட்டில் இத்தனைஅரசியல்வாதிகள் தினமும் கருத்து சொல்லும் பொழுது நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். சாதாரண மனிதர்களில் ஒருவரான நானே கருத்து கூறுகிறேன் உங்களுக்கு என்ன. உங்களுக்கு சினிமா இருக்கிறது மீடியா இருக்கிறது நீங்கள் என்ன சொன்னாலும் ஆதரிக்க பல கட்சிகளின் தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? நினைத்ததை பேச வேண்டியது தானே. யார் கேட்டாலும் கருது சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என்றால் போச்சு நன்றாக பேசுங்கள் தலைவரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X